Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மே.வங்க தேர்தலில் முறைகேடு; பாஜ சின்னத்துக்கு ஓட்டு பதியாமல் தடுத்தது அம்பலம்

மே.வங்க தேர்தலில் முறைகேடு; பாஜ சின்னத்துக்கு ஓட்டு பதியாமல் தடுத்தது அம்பலம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொல்கட்டா: மேற்கு வங்க தேர்தல் ஓட்டுப்பதிவின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பாஜவுக்கு வாக்களிக்கும் இடம் மறைக்கப்பட்டிருந்த விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மேற்கு வங்கத்தில் 2ம் மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து தங்கள் ஓட்டினை பதிவு செய்தனர். மொத்தம் 7 மாவட்டங்களில். 142 தொகுதிகளில் 1448 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தில்லுமுல்லு செய்திருப்பதாக பாஜவினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பால்டாவில் உள்ள சில ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்புதிவு இயந்திரத்தில் பாஜவுக்கு ஓட்டுப்போடக் கூடாது என்பதற்காக பட்டன் மீது டேப் ஒட்டி மறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
பாஜவுக்கு அடுத்து இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கான பட்டனும் இதேபோன்று டேப் போட்டு ஒட்டப்பட்டு இருந்தது. இதேபோன்று பல ஓட்டுச்சாவடிகளில் பட்டன் மீது டேப் ஒட்டப்பட்டு உள்ளது. இது குறித்து பாஜ முக்கிய பிரமுகரான அமித் மால்வியா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
சமூக வலைதளங்களில் இது பெரும் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்க, வேண்டும் என்றே பாஜ தங்கள் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்துவதாக திரிணமுல் காங்கிரசார் கூறினர். பாஜ புகார் குறித்து மேற்கு வங்க மாநில தேர்தல் கமிஷனர் மனோஜ்குமார் அகர்வால் கூறியதாவது;
அந்த குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தக்கூடாது, விரலில் வைக்கப்படும் அடையாள மை, ஓட்டளிப்பவரின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement