/ செய்திகள் / திமுகவுக்கு சாதகம்: வெளியானது மற்றொரு கருத்துக்கணிப்பு

திமுகவுக்கு சாதகம்: வெளியானது மற்றொரு கருத்துக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டுடேஸ் சாணக்யா சாணக்யா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பிலும், தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் திமுக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் தவெகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மற்றொரு கருத்துக்கணிப்பு நிறுவனமான டுடேஸ் சாணக்யா நிறுவனம் தனது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:திமுக கூட்டணி : 114 - 136அதிமுக கூட்டணி: 34-56தவெக : 52-74மற்ற கட்சிகள்: 0-2மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரள மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளையும் இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.மேற்கு வங்கம்பாஜ : 181-203திரிணமுல்: 89- 111மற்றவர்கள்:0-2அசாம்பாஜ: 93-111காங்கிரஸ்:13-42மற்றவை: 0-2கேரளாகாங்கிரஸ் கூட்டணி: 60 -78இடதுசாரி கூட்டணி: 55-73பாஜ :3-11மற்றவை:0-1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !