/ இந்தமுறை ஓட்டு யாருக்கு / கட்சி அல்ல; வேட்பாளர் தான் முக்கியம்!

கட்சி அல்ல; வேட்பாளர் தான் முக்கியம்!

பி.ஆர்.டி.ரிக்வேதா, 22 ஐ.டி., ஊழியர், மதுரைதே ர்தல் நேரத்தில் தான் எல்லோருமே அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று ஓட்டு வேட்டையாடுகின்றனர். ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, தொகுதியை ஒழுங்காக பராமரித்தாலே, வேட்பாளர் மறுபடியும் டென்ஷனாக வேண்டியதில்லை. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் ஊழல் இல்லாமல் சரியாக பணி செய்தால், தமிழகமே நன்றாக மாறிவிடும். எங்கள் பகுதியில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டியபோது, நல்ல தண்ணீர் குழாய் உடைந்தது. ஐந்து மாதங்களாக தண்ணீர் வரவில்லை. லாரி தண்ணீரையும் மெயின் ரோட்டில் தான் கொடுத்தனர். குறுகிய தெருக்களில் உள்ளவர்கள் எல்லாம் மெயின் ரோடு வந்து தண்ணீர் பிடித்தோம். வி.ஐ.பி., வந்தால் தான் ரோட்டை சரிசெய்கின்றனர். ரோடு பராமரிப்பு, குப்பை பராமரிப்பில் மதுரை ரொம்ப மோசமாக உள்ளது. சட்டசபை தேர்தலில் எந்த கட்சி என்பது முக்கியம் இல்லை. யார் வேட்பாளர், அவர் எங்கள் தொகுதிக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை கவனித்த பின்பே ஓட்டு போடுவேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் இந்தமுறை ஓட்டு யாருக்கு