Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜய்க்கு ஒரு வாய்ப்பு வழங்கலாமே!

விஜய்க்கு ஒரு வாய்ப்பு வழங்கலாமே!

எம்.புவிஸ்ணா மாறன், 27 மதுரை

தி. மு.க., அரசால் வெறும் பெயரளவில் மட்டுமே வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. தமிழகமெங்கும் தரமற்ற பாலங்கள், ரோடுகள் என திரும்பும் திசையெல்லாம் ஊழல் தான். ஒவ்வொரு கோவிலிலும் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் தரவரிசையில் மதுரை முதலிடத்தில் உள்ளது. இது, தமிழகத்திற்கே வெட்கக்கேடானது. ஊழலற்ற நல்லாட்சியை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறோம்.

இலவசங்கள் என்ற பெயரில் தேர்தல் நேரத்தில்,மக்களை திசைதிருப்பி ஏமாற்றும் பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபடுகின்றனர். தேவையற்ற இலவசங்களால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது.

எவ்வித பின்புலமும் இன்றி, சுயேச்சையாக த.வெ.க., தேர்தலை எதிர்நோக்குகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்பே, விஜய் தனது நற்பணி மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். தன் திரைப்பட லாபத்தை விட்டு விட்டு, மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கலாமே.

Advertisement