தே.ஜ., கூட்டணிக்கு தான் என் ஓட்டு!
எம்.ஹரிணி, 22 திருப்பூர்
ரொம்ப காலமா தி.மு.க. - அ.தி.மு.க., தான் மாறி மாறி ஆட்சி பண்ணிட்டு இருக்காங்க. இதுல ஒரு மாற்றம் வரணும். அண்ணாமலை தலைமைல பா.ஜ., இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு தோணுது. ஏன்னா, இளைஞர்கள் மத்தியில அவர் ஒரு பெரிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இப்போ இருக்கிற உலக சூழலை கவனிச்சா, இஸ்ரேல் -- ஈரான் போரால மத்த நாடுகள் எல்லாம் கஷ்டப்படும்போது, நம்ம நாட்டு மக்களுக்கு அந்த அளவுக்கு பாதிப்பு இல்லாம, மத்திய அரசு பார்த்துக்கிட்டது பெரிய விஷயம். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி ஆட்சி வரணும்ங்கிறதுதான் என் விருப்பம்.
முக்கியமா, தமிழகத்துல பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கணும். படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கணும்னு எதிர்பார்க்கிறேன். அப்புறம் விஜய் அரசியலுக்கு வந்ததை பத்தி கேக்குறாங்க. அவர் வந்ததுல தப்பில்ல. அவருக்கும் ஒரு வாய்ப்பு தரலாம். ஆனா, அரசியல்ல அவர் இன்னும் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு. அதனால, இப்போதைக்கு மத்திய அரசை மனசுல வச்சு, பா.ஜ.,வுக்கு ஓட்டு போடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்