Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


கல்வியில் கவனம் செலுத்திய தி.மு.க.,

கல்வியில் கவனம் செலுத்திய தி.மு.க.,

அமுதபிரியா, 23 கண்ணகி நகர், சென்னை

அ. தி.மு.க., ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தும் கட்சியாக தெரியவில்லை. த.வெ.க., தலைவரிடம் ஆட்சியை கொடுத்தால், நிர்வாகம் எப்படி இருக்கும் என யோசிக்க முடியவில்லை. மக்கள் நலன் குறித்து சிந்திப்பவராக அவர் இல்லை. இருந்திருந்தால், கரூர் துயரத்திற்கு நான் தான் காரணம் என பொறுப்பேற்று இருப்பார். அங்கு தவித்த மக்களை பார்க்காமல் விட்டு ஓடியவர், தமிழகத்தை ஆட்சி செய்யும் நிலை வந்தால், மக்களையும் கண்ணீர் சிந்தவிடுவார். அவரிடம் தலைமை பண்பு உள்ளது என சொல்லும் அளவில் அவரது செயல்பாடு இல்லை.

மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய பல காரணங்கள் உள்ளன. 'நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, காலை உணவு' என, கல்வியில் முழு கவனம் செலுத்தியது. மகளிர் உரிமை தொகை, கட்டணமில்லா பயணம் என, பொருளாதாரத்தில் பின்தங்கிய எங்களை போன்ற குடும்பங்களை தலைநிமிர வைத்துள்ளது. என் குடும்பத்தில் நான் முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாக, தி.மு.க., தான் காரணம். மீண்டும் தி.மு.க., வந்தால் தான், கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஏழை, நடுத்தர குடும்பங்கள் வளர்ச்சி பெறும்.

Advertisement