வளர்ச்சி பற்றி சிந்திப்பது நா.த.க., மட்டுமே!
திராவிட கட்சிகள் குறிக்கோளற்ற கூட்டம்! அ டுத்த ஒரு நுாற்றாண்டுக்குள் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை என்றால், மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாடு போன்ற அனைத்து நாடுகளிலும் கடும் பஞ்சம் வரக்கூடும். இவ்வகை எதிர்கால பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கவே விவசாய வளர்ச்சியை நோக்கிய பாதையில், நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது. தேனியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் வேண்டும் என அங்குள்ள காப்பு காடுகளுக்கே சென்று, ஒருங்கிணைப்பாளர் சீமான் போராடி உள்ளார். குடிநீர், கல்வி போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். சீமானை, 'வாயாலே வடை சுடுகிறார்' என்று கூறுவோர், சிந்தனையில்லாத கூட்டமாகத் தான் எனக்குத் தெரிகின்றனர். எதிர்காலத்தைக் குறித்த குறிக்கோள் இல்லாத கூட்டமாக நான் திராவிட கட்சிகளை பார்க்கிறேன். விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுயசார்பு வாழ்க்கைக்கான அடித்தளம் அமைக்க உள்ள நாம் தமிழர் கட்சிக்குத்தான் என் ஓட்டு. அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. சபரி, 20 ஒய்.எம்.ஆர்., பட்டி, திண்டுக்கல்