/ செய்திகள் / எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டியிடவில்லை: சீமான் கேள்வி

எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டியிடவில்லை: சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: விஜய் பேசும்போது தவெக, திமுக இடையே போட்டி என்கிறார். எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டி போடவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.புதுக்கோட்டையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை பாஜ அரசு குறைக்க முயற்சிக்கிறது. 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு எம்பி தேவை. மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை முடிவு செய்யக் கூடாது. மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்கவும், தொகுதி மறு சீரமைப்புக்கு என்ன தொடர்பு உள்ளது? பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினாலும், ஆண்களுக்கான எண்ணிக்கை குறைய கூடாது என்பது ஆணாதிக்க சிந்தனை. தொகுதிகளை அதிகரித்தால் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்பது என்ன மாதிரியான மனநிலை? விஜய் பேசும்போது தவெக, திமுக இடையே போட்டி என்கிறார்.எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டி போடவில்லை. முதல்வர், துணை முதல்வர், பாஜ நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு விஜய் பிரசாரம் செல்லவில்லை. காரைக்குடி தொகுதிக்கு தான் விஜய் செல்கிறார்; அப்போது விஜய்க்கு போட்டி யாருடன்? நான் காரைக்குடிக்கான ஆள் இல்லை. ஒட்டு மொத்த தமிழ்குடிக்கான ஆள்; நாட்டையே வெல்ல போராடுகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !