Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தர்மபுரியில் இன்று பிரசாரம்; நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

தர்மபுரியில் இன்று பிரசாரம்; நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தர்மபுரி: தர்மபுரியில் நடைபயிற்சியின் போது திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் முழுவீச்சில் இறங்கி உள்ளனர்.

அந்த வகையில், தர்மபுரிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று காலை நடைபயிற்சியின் போது மக்களிடம் ஓட்டு சேகரித்தார். திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக கோட்ட தெரு பகுதியில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, சிலர் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர்.

Advertisement