Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


திமுகவினர் ரூ.8 ஆயிரம் கூப்பன் வினியோகம்; தேர்தல் கமிஷன் கண்டிப்பு

திமுகவினர் ரூ.8 ஆயிரம் கூப்பன் வினியோகம்; தேர்தல் கமிஷன் கண்டிப்பு

நமது நிருபர்

ரூ.8 ஆயிரம் கூப்பன் மாடல் வினியோகத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுள்ளதாக திமுக பிரசாரம் செய்வது உண்மைக்கு புறம்பானது; தவறாக வழி நடத்தக்கூடியது என தேர்தல் கமிஷன் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'இல்லத்தரசி திட்டம்' என்ற பெயரில், குடும்ப தலைவிகளுக்கு, 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் எனவும் அதை பயன்படுத்தி, வாஷிங் மெஷின், பிரிஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திமுகவினர் வீடு வீடாக கூப்பன் வினியோகம் செய்கின்றனர். பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினரிடம் இத்தகைய கூப்பன்கள் பிடிபட்டுளளன. சில இடங்களில் கூப்பன் வினியோகத்துக்கு எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்து தகராறு செய்கின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் திமுகவை சேர்ந்த ஒருவர் ரூ.8 ஆயிரம் கூப்பன் மாடல் வினியோகம் என பதிவிட்டு, ''பொதுமக்களிடம் ரூ.8,000 கூப்பன் மாடல் தந்து ஓட்டு சேகரிக்க இந்தியத் தேர்தல் கமிஷனிடம் முறையான அனுமதி பெற்றுள்ளது திமுக. மாற்றுக்கட்சியினர் பிரச்னை செய்தால் அனுமதி நகலைக் காட்டவும்'' என கூறியிருந்தார். அனுமதி கடிதம் என்று கூறி ஒரு கடிதத்தையும் வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவுக்கு பதில் அளித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மின்னணு ஊடகங்களில்(Electronic media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ், அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகள் (handbills) ஆகியவற்றிற்கு பொருந்தாது.
அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுள்ளதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. தவறாக வழி நடத்தக்கூடியது. இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Advertisement

ஏப் 15, 2026 09:09 pm

கூப்பன் மாடல் விநியோகம் என்றால் என்ன பணம் கொடுத்தால் என்ன எல்லாமே தேர்தல் சமயத்தில் அரசியல் சட்டத்திர்க்கு புறம்பானவைகள்தான் இவைகளை தேர்தல் ஆணையம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் அந்த தொகுதி வேட்பாளர் தகுதி அற்றவர் என்று கூற வேண்டும் இந்த குறுக்கு வழிகளை எல்லாமே கண்டுபிடித்து அவைகளை ஆக்கபூர்வகாம் நிறைவேற்றுவதில் திராவிட மாடல் அரசு கை தேர்ந்தவர்கள் எல்லா கூப்பங்களையும் சேகரித்து தீயில் இடவேண்டும்

Reply Rate this
ஏப் 15, 2026 06:17 pm

எல்லாம் பேசுவார்கள் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் இந்த புல்லை தின்னும் புலிகள்.

Reply Rate this
ஏப் 15, 2026 06:00 pm

பகிரங்கமாக லஞ்சம் - எலக்சன் கமிஷன் தேர்தலை ஒத்திப்போட வேண்டும், தீயசக்தி திமுகவை தடை செய்ய வேண்டும்

Reply Rate this
ஏப் 15, 2026 05:57 pm

தேர்தல் கமிஷன் கண்டிப்பதென்ன? நடவடிக்கைதான் எடுக்கவேண்டும். வருத்தம் தெரிவிப்பதும் கண்டனம் தெரிவிப்பதும் சட்டப்படி செல்லத்தக்கதா?

Reply Rate this
ஏப் 15, 2026 04:54 pm

8000 கொடுத்தால் கமிஷன் எல்லாம் போக கையில் 4000 ரூபாய் பொருள் கூட தேறாது. அதற்கு என்று ஒரு ஸ்பெஷல் பொருட்களை கடைகளில் வைத்து தலையில் கட்டுவது நடக்கும். இது வரையில் தமிழ்நாட்டில் வழங்கிய இலவசங்கள் எல்லாம் ஒரு வருடம் கூட வாழ்க்கையை தாண்டியது இல்லை. இது தான் உண்மை.

Reply Rate this
ஏப் 15, 2026 03:57 pm

என்னுடைய விடியோவுக்கு ஒருத்தன் சொல்றான், உனக்கு வேண்டாம்னா போ.. எதுக்கு அடுத்தவங்களுக்கு கொடுக்குறதை விமர்சனம் செய்யுறன்னு. இப்படிப்பட்ட ஜென்மங்கள் இருக்குறவரைக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டமே

Reply Rate this
ஏப் 15, 2026 03:39 pm

தி.மு.கவினர் 8000 ரூ கூப்பன் கொடுப்பதை தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. கண்டித்து என்ன செய்து விடும்? கூப்பன் கொடுக்கும் தி.மு.க வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுமா? முடியாது. ஆனால் தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். நான்கு அதிகாரிகள் ,மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும். உடன் டோக்கன் விநியோகம் முற்றிலும் நின்று விடும்.

Reply Rate this
ஏப் 15, 2026 02:50 pm

R K நகர் இடைத்தேர்தலில் தினகரன் 2000 ரூபாய்க்கு டோக்கன் போல் 20 ரூ செல்லுபடியாகும் நோட்டை கொடுத்தான். 8000 ரூ கூப்பன் என்பது ஏமாற்று வேலை.

Reply Rate this
ஏப் 15, 2026 02:45 pm

The Election Commission should have taken the decision to disqualify the candidate and the party for this type of corrupt method of canvassing for votes. spineless election commission

Reply Rate this
ஏப் 15, 2026 02:42 pm

திமுகவின் எட்டாயிரம் ரூபாய் டோக்கன் சிறந்ததா அல்லது அண்ணா திமுகவின் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் சிறந்ததா என்று மக்கள் சிந்திப்பார்கள். டோக்கனை கொண்டு போய் கடையில் கொடுத்தால் பொருள் கிடைப்பது நிச்சயம் கிடையாது ஆனால் பத்தாயிரம் ரூபாய் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே டோக்கன் கண்துடைப்பு.

Reply Rate this