Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டியிடவில்லை: சீமான் கேள்வி

எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டியிடவில்லை: சீமான் கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுக்கோட்டை: விஜய் பேசும்போது தவெக, திமுக இடையே போட்டி என்கிறார். எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டி போடவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுக்கோட்டையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை பாஜ அரசு குறைக்க முயற்சிக்கிறது. 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு எம்பி தேவை. மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை முடிவு செய்யக் கூடாது. மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்கவும், தொகுதி மறு சீரமைப்புக்கு என்ன தொடர்பு உள்ளது?
பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினாலும், ஆண்களுக்கான எண்ணிக்கை குறைய கூடாது என்பது ஆணாதிக்க சிந்தனை. தொகுதிகளை அதிகரித்தால் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்பது என்ன மாதிரியான மனநிலை? விஜய் பேசும்போது தவெக, திமுக இடையே போட்டி என்கிறார்.
எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டி போடவில்லை. முதல்வர், துணை முதல்வர், பாஜ நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு விஜய் பிரசாரம் செல்லவில்லை. காரைக்குடி தொகுதிக்கு தான் விஜய் செல்கிறார்; அப்போது விஜய்க்கு போட்டி யாருடன்? நான் காரைக்குடிக்கான ஆள் இல்லை. ஒட்டு மொத்த தமிழ்குடிக்கான ஆள்; நாட்டையே வெல்ல போராடுகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement

ஏப் 15, 2026 04:19 pm

எடப்பாடி தொகுதி திமுக அலுவலகம் வெறிச்சோடியது. கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஒரு டம்மியமான வேட்பாளர். ஆக தலைவர்கள் தங்கள் வெற்றியை போட்டியின்றி உறுதி செய்துள்ளனர்

Reply Rate this
ஏப் 15, 2026 11:28 am

விஜய் எடப்பாடி தொகுதியை சீமானுக்கு விட்டு கொடுத்து விட்டார், சீமான் வெற்றி பெறட்டும் என்று.

Reply Rate this
ஏப் 15, 2026 11:25 am

எல்லாம் பிஜேபி செட்டிங் தான்... இவர்கள் குறுக்கு வழியில் தமிழ்நாட்டை ஆளநினைக்கிறார்கள். அது ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது. தமிழ்நாட்டில் சில பல அடிமைகள் பிஜேபிக்கு பயந்து வேலைசெய்கின்றன.

Reply Rate this
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
ஏப் 15, 2026 11:43 am
Rate this
chandran - madurai
பிஹாரில் என்ன நடக்குதுன்னு பாருங்க, பாஸ்.
அதே நிலைமை தான் தமிழ்நாட்டுக்கும் நடக்கும். பொறுத்து இருந்து பார்க்கவும்.
ஏப் 15, 2026 12:03 pm
Rate this