சூரிய தலைவர் எச்சரிக்கை
சூரிய தலைவர் எச்சரிக்கை 1. திடுமென கூட்டணிக்குள் நுழைந்து கூடுதல் சீட்கள் வாங்கியதில், பானைக்கும் முரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இந்நிலையில், கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியின் தலைவர் முன்னிலையிலேயே, சிறுத்தை தலைவரை, முரசு தலைவர் அவமானப்படுத்தி விட்டதாக கொந்தளிக்கும் சிறுத்தைகள், முரசு தலைவர் போகுமிடமெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் சிறுத்தைகள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என சூரிய கட்சி தலைவர் எச்சரித்துள்ளாராம். சங்கட நெளியல் 2. கள்ளச்சாராயத்துக்கு 63 பேரை பலிகொண்ட தொகுதியில் இலை கட்சியை சேர்ந்த முருகக் கடவுள் பெயர் கொண்ட மக்கள் பிரதிநிதிக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. 'கள்ளச்சாராய சாவுகள் விஷயத்தை பெரிதாக்கி, அரசுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி, எளிமையான மக்கள் பிரதிநிதியாக இருந்தவருக்கு இலை கட்சியில் மீண்டும் சீட் கொடுக்கவில்லை' என்ற கொந்தளிப்பு தொகுதிக்குள் இருக்க, இலை கட்சியினர் சங்கடத்தில் நெளிகின்றனராம்.