Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 கிசு கிசு -1

 கிசு கிசு -1

வட்டமடிக்கும் இளவட்டம்! 1. லாட்டரி வீட்டுப் பெண்மணி இலை கட்சியில் சேர்ந்ததும், டெல்டா மாவட்டத்தில் உள்ள குடி தொகுதிக்கு வேட்பாளராக்கினார், அக்கட்சியின் தலைவர். அந்தப் பெண்மணி, தொகுதி முழுக்க தனக்கு ஓட்டு சேகரிப்பதற்காக கல்லுாரி மாணவியர் 1,000 பேரை களம் இறக்கி இருக்கிறாராம். அவர்கள் பளபள உடையில், தொகுதி முழுக்க ஓட்டு கேட்டு வலம் வர, அழகான கல்லுாரி பெண்களை இளவட்ட பசங்க வட்டமடிக்க, அவர்களை விரட்டி விடுவதற்கே நேரம் போதவில்லையாம்.



வெளியிட்டது யார்? 2. விசில் கட்சியின் தலைவர் நடித்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பது தாமதமானது. அக்கட்சியினரும் தயாரிப்பு நிறுவனமும் முட்டி மோதியும் சான்றிதழ் கிடைக்கவில்லை. 'படம் ரிலீஸ் குறித்து தேர்தலுக்குப் பின் பாத்துக்கலாம்' என, விசில் கட்சித் தலைவர் சொல்லி விட்டு, தேர்தல் வேலையில் பிசியாக இருக்க, படம் இணையதளத்தில் வெளியாகி விட்டது. எப்படி வெளியானது என்பது குறித்த தீவிர ஆய்வில், விசில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளதாம்.



தங்க காசு ரெடி! 3. சூரிய கட்சியில் கந்தன் மற்றும் ஏழுமலை பெயரை கொண்ட 'மாஜி' அமைச்சர், முழுக்க கொங்கு மக்களே வசிக்கும் பகுதியில் தைரியமாக களமிறங்கி போட்டியிட, தெற்கில் இருக்கும் அந்த தொகுதியில் இலையோடு போட்டி கடுமையாக இருப்பதாக தகவல் தெரிய வந்திருக்கிறதாம். இதையடுத்து, ஆளுக்கு ஒரு கிராமில் தங்க காசு கொடுக்க ஏற்பாடு செய்திருக்கின்றனராம். தொகுதியில் தயார் நிலையில் இருக்கும் தங்கக் காசுகள், இரண்டொரு நாளில் வினியோகிக்கப்படுமாம்.

Advertisement

ஏப் 12, 2026 08:57 am

விசில் கட்சி தலைவர் தேர்தலில் பிசியாக உள்ளாரா? காமெடி பண்ணாதீங்க.

Reply Rate this