தவெகவுக்கு ஆதரவா? மேலிடம் முடிவெடுக்கும் என்கிறது கம்யூ.,
சென்னை: “தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவது குறித்து, கட்சி மேலிடம் நல்ல முடிவு எடுக்கும்,” என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு.வீரபாண்டியன் கூறினார். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் நேற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேசினர்.பின், வீரபாண்டியன் கூறியதாவது: ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தேர்தல் முடிவுகள் குறித்து அவருடன் ஆலோசித்தோம். பா.ஜ., வகுப்புவாத சக்தி. ஜனநாயகத்தின் முதல் எதிரி. அரசியல் கட்சிகள் வெற்றி பெறலாம்; தோல்வி அடையலாம். ஜனநாயகம் தோல்வி அடையக்கூடாது. அந்த வகையில், பா.ஜ., அணி தோல்வி அடைய வேண்டும் என்ற எங்கள் அரசியல் நிலைப்பாடு வெற்றி பெற்றுள்ளது. அதை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். மக்களின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். தமிழகத்தில் ஜாதி, மத சக்திகளுக்கு இடமில்லை என, தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். த.வெ.க.,வுக்கு ஆதரவு குறித்து, கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும். த.வெ.க.,விடமிருந்து இதுவரை எங்களுக்கு அழைப்பு இல்லை. இதுவரைக்கும் எந்த கோரிக்கையும் அவர்களிடமிருந்து வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.சண்முகம் கூறியதாவது: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டோம்; அது நிறைவேறியுள்ளது. பா.ஜ., 27 இடங்களில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் பா.ஜ.,வை நிராகரித்து விட்டனர் என்பது நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am