தி.மு.க.,வுக்கு சுயபரிசோதனை தேவை: உதயநிதி
சென்னை : ''தி.மு.க., பார்க்காத வெற்றி கிடையாது; பார்க்காத தோல்வி கிடையாது. கட்சிக்கு சுயபரிசோதனை தேவை,'' என, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி கூறினார்.
சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின், அவர் அளித்த பேட்டி: சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக என்னை தேர்வு செய்வது குறித்து, கட்சி தலைவர் முடிவு செய்வார். எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் என்ன முடிவு எடுக்கின்றனரோ, அதன்படி தான் நான் செயல்படுவேன். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில், எனக்கு மக்கள் வெற்றி வாய்ப்பு அளித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்குரியவராக செயல்படுவேன்.
தேர்தலில் தி.மு.க., பார்க்காத வெற்றி கிடையாது; தி.மு.க., பார்க்காத தோல்வி கிடையாது. கட்சிக்கு எப்போதுமே சுயபரிசோதனை தேவை. மக்கள் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் கடமையை மக்களுக்கு செய்வோம்.
இந்த முறை இளைஞர்களுக்கு அதிகமாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் நிறைய பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பெரியகருப்பன், நீதிமன்றத்திற்கு செல்ல ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
சுயபரிசோதனை செய்தால் நீங்கள் கட்சியை கலைத்துவிட்டு செல்வதுதான் சரியான முடிவாக இருக்கும். திருட்டு திராவிடத்தின் முடிவுரை தொடங்கப்பட்டுவிட்டது.
உயிர் பிரிஞ்சுபோன பிற்பாடு உடம்புல என்ன வியாதின்னு கண்டுபிடிச்சு அதுக்கு என்ன ட்ரீட்மென்ட் குடுக்கலாம் என்று யோசிப்பதில் என்ன லாபம்
அதென்ன திமுக தலைவர் யாரை சொல்கிறாரோ அவர்தான் எதிர்க்கட்சி தலைவர் , எங்க அப்பா சொல்கிறபடி என்று சொல்லுங்க , இன்னமும் உங்க அடிமைகளை இப்படி பேசி பேசி ஏமாற்றாதே , ஒரு கடைக்கோடி தொண்டன் உதயசூரியன் சின்னத்தில் நின்றால் வோட்டு கேட்க போகாமலே வெற்றி பெறுவான் என்று சொன்னீங்க , இன்னமும் காது குத்து , உருப்படவே மாட்டடீங்க‘
சுய பரிசோதனை ரொம்ப முக்கியம்...மன்னராட்சியை ஒழித்து ஜனநாயகம் ஏற்படனும்.உம்மை எதிர் கட்சிதலைவரா போட்டா விரைவில் மூடுவிழா நடந்துவிடும்.
In 2026, Tamil year: Paraabava பராபவ, DMK is ousted and TVK is first coming to power overthrowing டம்ளக்.
ரோல்லபக்: Now
In 1967 Tamil year: Paraabava பராபவ, DMK first came to power overthrowing Congress.
ஆமாம் ஒன்றுமே தெரியாத உங்களுக்கு இந்த அளவுக்கு முக்கியதுவம் கொடுத்தது சரிதானா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
அப்டியா ஒதிய மரம் அதான் சிரிப்பியே லூசுத் தனமா இப்பச் சிரிக்கலாம்ல? ஒன்னோட சுய பரிசோதனை என்னான்னு சொல்லவா? "ஹய்யய்யோ எத்தினி கோயிலுக்கு ஓடுனம் அம்மாக்காரி வேர வேப்பில டான்சு எல்லாம் குடுத்தாளே பயன் குத்தாட்டம் எல்லாம் போட்டானே அக்காக்காரி கூடப் பொட்டு வெச்சுச்சு மாடுமாதிரி தலய ஆட்டிட்டு இருந்தாளே 234 தொகுதிலயும் ஆளுக்கு அய்யாயரம் எட்டாயரம் அளுதமே முக்காவாசிய அந்தந்தத் தொகுதி ஆளுங்களே முளுங்கிட்டானுங்களே கூட்டணிகாரனுங்களுக்குப் நூறு நூறு கோடிகளா மூக்கால அளுதமே ஹய்யோ ஹம்மா போன ரண்டு வருசமாத் திமிரோட ஒளரினதுக்கு மக்கா அல்லாருமா, "அந்த" வாயில ஆப்பு அடுச்சு உட்டுட்டாங்களே என்ன ஒண்டியா ஜெயிக்கவச்சு மாட்டி உட்டுட்டாங்களே" போதுமா ஒதிய மரம்?
மமதை மாதிரி சக்கரநாற்காலியில் கபடநாடகம் செய்து காலில் சும்மானாச்சும் கட்டுப்போட்டு வீதிக்கு வீதி தள்ளு வண்டியில் வோட்டு கேட்டிருக்கலாம் ஸ்டாலின் கொளத்தூரில் வாக்கை அள்ளி இருப்பார். இதெல்லாம் கலைஞர் காலத்து பார்மூலா .. கோட்டைவிட்டிட்டியே பரட்டை... .

முதல்ல சமத்துவமுன்னு தண்ணீல எழுதாதிங்கடா. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உண்மையா இருங்கடா. பெரும்பான்மையான இந்துக்களுக்கு உண்மையாக இருங்கடா.