Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தவெகவுக்கு ஆதரவா? மேலிடம் முடிவெடுக்கும் என்கிறது கம்யூ.,

தவெகவுக்கு ஆதரவா? மேலிடம் முடிவெடுக்கும் என்கிறது கம்யூ.,

சென்னை: “தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவது குறித்து, கட்சி மேலிடம் நல்ல முடிவு எடுக்கும்,” என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு.வீரபாண்டியன் கூறினார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் நேற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
பின், வீரபாண்டியன் கூறியதாவது: ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தேர்தல் முடிவுகள் குறித்து அவருடன் ஆலோசித்தோம். பா.ஜ., வகுப்புவாத சக்தி. ஜனநாயகத்தின் முதல் எதிரி. அரசியல் கட்சிகள் வெற்றி பெறலாம்; தோல்வி அடையலாம். ஜனநாயகம் தோல்வி அடையக்கூடாது. அந்த வகையில், பா.ஜ., அணி தோல்வி அடைய வேண்டும் என்ற எங்கள் அரசியல் நிலைப்பாடு வெற்றி பெற்றுள்ளது. அதை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். மக்களின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். தமிழகத்தில் ஜாதி, மத சக்திகளுக்கு இடமில்லை என, தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். த.வெ.க.,வுக்கு ஆதரவு குறித்து, கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும். த.வெ.க.,விடமிருந்து இதுவரை எங்களுக்கு அழைப்பு இல்லை. இதுவரைக்கும் எந்த கோரிக்கையும் அவர்களிடமிருந்து வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சண்முகம் கூறியதாவது: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டோம்; அது நிறைவேறியுள்ளது. பா.ஜ., 27 இடங்களில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் பா.ஜ.,வை நிராகரித்து விட்டனர் என்பது நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மே 06, 2026 10:38 am

வீரபாண்டியன் அவர்களே, உங்கள் கட்சிக்கு மேலிடம் என்று ஒன்று இருக்கிறதா ? சும்மா கிச்சு கிச்சு மூட்டாதீர்கள். நீங்கள் நிற்கப் போவது
டேனியல் ராஜா முன் தான். டேனியல் ஜோசப்பை தள்ளி விடுவாரா ?

Reply Rate this
மே 06, 2026 09:28 am

இவர்கள் முகமே பார்க்க காட்டிகொடுகிறதே . பாய்வதற்கு தயாராக உள்ளோம்

Reply Rate this
மே 06, 2026 08:18 am

அது என்ன மண்ணாங்கட்டி மேலிடம்? அப்படி ஒன்று இருக்கா? கம்யூ ஒரு லெட்டர் பேட் கட்சி. மொதல்ல, இந்த காட்சிகள் எல்லாம், உதயசூரியன் சின்னத்தில் போட்டிபோட்டு காட்சிகள்.

அநேகமா, அதிமுக மற்றும் திமுக இருவருமே மெர்ஜ் ஆகி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். இந்த இருவருக்குமே, அண்டெர்லின்க் கனெக்ஷன் இருக்கு. அப்படி பண்ணிட்டா, தான் அடித்த கொள்ளைகளை, மீண்டும் தொடரலாம்.

Reply Rate this

கம்யூனிச மேடையில்தான் உதயநிதி சனாதன கருத்துக்களை உதிர்த்தார் என்பதால் திமுக கூட்டணியைவிட்டு ஒருபோதும் விலகமாட்டார்கள்.

Reply Rate this
மே 06, 2026 06:35 am

இந்த பேச்சின் எதிரொலியாக ஸ்டாலினிடமிருந்து நல்ல தொகையை வசூல் செய்ய திட்டம் போடுகின்றார்கள். அல்லது விஜய்யிடமிருந்து கூட எதிர்பார்க்கின்றவர்கள் இந்த மாடர்ன் கம்யூனிஸ்டுகள். இப்போதெல்லாம் இவர்கள் கார்ப்பரேட் கம்யூனிஸ்டுகள். வருமானம் செய்கின்ற பிசினஸ் ஆக்கிவிட்டார்கள் பெட்டி பிரேமா போல. விலைபோக தயார் என்பதுதான் இந்த மேலிடம் நல்ல முடிவு என்பதெல்லாம்.

Reply Rate this
மே 06, 2026 06:10 am

இடப்பாடியாரை பாஜக அடிமை என்று ஒயாமல் பிரசாரம். கண்ணாடி முன் நின்று கேட்டுக் கொள்ளுங்கள். நீங்களும் திமுக அடிமைதான்.

Reply Rate this
Nathansamwi - Gobichettipalayam
இல்லை ... பொருத்தமா இருக்கும்
மே 06, 2026 08:03 am
Rate this