த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம்: கூட்டணி கட்சிகளிடம் கேட்டுக் கொண்ட ஸ்டாலின்
- நமது சிறப்பு நிருபர் -
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்னை அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டாம்' என, கூட்டணி கட்சிகளிடம் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. சென்னை கொளத்துார் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். அவரது தேர்தல் தோல்விக்கு, கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஸ்டாலினை சந்திப்பதற்காக, தி.மு.க., நிர்வாகிகள், வெற்றி பெற்ற வேட்பாளர்களும் தோல்வி அடைந்த வேட்பாளர்களும் அறிவாலயம் வந்தனர். கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் திருமாவளவன், இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் உள்ளிட்டோரும் வந்தனர்.
அப்போது, புதிய ஆட்சி குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் விவாதித்துள்ளார். 'ஆட்சி அமைக்க த.வெ.க., தரப்பில் ஆதரவு கேட்டால் கொடுக்க வேண்டாம்; உள்ளாட்சி தேர்தலில், நம் கூட்டணி முழு வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது' என, ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது.
Advertisement
எடப்பாடியோ அல்லது , ஸ்டாலினோ, இந்த இருவருக்கும் தான் மற்றும் தனது கட்சி படு தோல்வியுற்ற உணர்ச்சியே இல்லை. தமிழகத்தை, பத்து இலட்சம் கோடி கடனுக்குத் தள்ளிவிட்டத்திலான குற்ற உணர்ச்சி துளி கூட இல்லை.
அதிகார திமிருக்கு ஆப்பு வைத்து, அட வெளியில போயி தொலையுங்கள் என்று மக்கள் துரத்தி விட்டும், புத்தி வரவில்லை.
செய்யக் கூடாத அனைத்தையும் செய்துவிட்டு பேசக் கூடாத வார்த்தைகளை பேசிவிட்டு இப்போது இன்னொரு கட்சி ஆட்சியமைக்க ஆதரவுக் கொடுக்க வேண்டாம் என்றால் எப்படி? திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் முதல்வர்ப் பதவி, துணைமுதல்வர் பதவி கலைஞர் குடும்பத்திற்க்கு மட்டும்தான்? மத்தியிலும் இதே நிலை. பிரதமர் தமிழகத்திற்கு வந்த போதெல்லாம் மரியாதைக்காகவும் அவரை சந்திக்கவுமில்லை, பேசவுமில்லை. நீங்கள் இன்றுவரைப் பேசுகின்ற மதச் சார்பற்றக் கொள்கை இன்னும் விளங்கவில்லை. இந்திய நாட்டில் ஹிந்துமதத்தை எதிர்ப்பது உங்களின் மதச் சார்பற்றக் கொள்கையா? ஒரு உண்மையான நன்கு கல்விக் கற்ற தமிழருக்கு மட்டும்தான் தமிழகத்தின் உயர் சைவ நெறிக் கொள்கைகள், கோட்ப்பாடுகள் அதன் ஈடில்லாத சிறப்பும் புரியும். எல்லாம் மதங்களையும் கலாச்சாரங்களை நாகரீகங்களை காலத்தையும் வென்று தாண்டி உயர்ந்த இடத்தில் இருப்பது நம் தாய்மொழி தமிழ். கடவுளை பற்றி நன்கு அறிந்த பேச தகுதியுள்ள அவன்மட்டும்தான் உண்மையென்று அன்றே அறிந்த மொழி இந்த தமிழ்மட்டும்தான். அதையே நாம் இன்னும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. அதற்கே இன்று சோதனை என்றால் சும்மாயிருக்க முடியுமா?
பாஜக வாக்கு இயந்திரத்தில் கோளாறுபடி செய்து பின் கதவால் விஜயை ஆட்சியில் அமர்த்த பார்த்தால் விஜய் காங்கிரசுடன் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க போகிறார் இது பாஜக வுக்கு திருடனுக்கு தேள் கொட்டினது போல அடுத்து நடப்பதை பார்ப்போம்
தினமலர் தவிர மற்ற ஊடக சொம்புகளை நம்பி இன்னும் நாசமாகபோகிறார்.பெரிய பத்திரிக்கைகள் உள்பட எல்லாம் சொம்படித்தனர் தினமலர் மட்டுமே சொன்னது செய்தது அப்படின்னு பட்டியல் போட்டது விஜய் வெற்றிக்கு நாளிதழின் பங்கும் கணிசமாக உண்டு
minority கோவர்ன்மெண்ட் அ செலக்ட் பண்ண பட்ட விஜய் , மற்றவரிடம் உதவி கேட்டகிறார் ,சட்ட சபையில் கேள்வி அம்புகளால் எதிர் கட்சிகள் திணறடிப்பார்கள்
விஜய் க்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தராவிட்டால், பிஜேபி யின் அழுத்தத்தால் அதிமுக விஜய் க்கு ஆதரவு கொடுக்கும். பிஜேபி யின் மறைமுக ஆட்சி விஜய் மூலமாக தமிழ்நாட்டில் நடக்கும். அவ்வளவுதான். அப்படியும் எந்த கட்சியும் விஜய் க்கு ஆதரவு தராவிட்டால், மறு தேர்தல் வரும் விஜய் தனி மெஜாரிட்டி யாக வரக்கூடும். ஏனெனில், இளைஞர் கூட்டம் சினிமா நடிகனுக்கு பின்னால் நிற்கிறது. மேலும், ஊழல் திமுக மற்றும் அதிமுக விற்கு மாற்று கட்சிகள் விஜய் மற்றும் சீமான் கட்சிகள் தவிர வேறு கட்சிகள் இல்லை. சீமான் வெறுப்பு அரசியலை பேசி, "வோட்டு எனக்கு போட்டா போடு இல்லாவிட்டால் வேறு எவனுக்காவது போடு" என்று வாக்காளார்களை வெறுப்பேற்றி வீணாய் போய்ட்டார். நமது தாத்தா காலத்திலும் சினிமா மோகம் இருந்திருக்கிறது. அவர்கள் சினிமா நடிகர் MGR யுடன் சென்று உத்தமர் காமராஜரை தோற்கடித்தார்கள்.
விடியலுக்கு முதல்மந்திரின்னு பவர் இருந்தவரைதான் மதிப்பு கொடுப்பாங்க. இப்ப பல்லை பிடுங்கின பாம்பாக இருப்பதால் கட்சி பெருசுகளிருந்து உபிகள்வரை மதிக்காதபோது கூட்டணி தலைவர்கள் சீந்தகூட மாட்டாங்க. கட்சிக்கும் இனி இறங்கமுகமாக அழிவுகாலம்தான்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு இருந்ததாக தானே நம்பினீர்கள். அனைத்தும் நமதே என்று. நம்மையும் மீறிய சக்தியை சில நேரங்களில் வென்று விடலாம். எப்போதும் அல்ல.