திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறார் விஜய்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை, வரும், 18ம் தேதிக்குள் விஜய் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க., தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என, இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே எம்.எல்.ஏ.,வாக இருக்க முடியும் என்பதால், ஏதாவது ஒரு தொகுதி பதவியை, விஜய் ராஜினாமா செய்ய வேண்டும். பெரம்பூர் தொகுதி, சென்னையில் இருப்பதால், தொகுதிக்கு சிரமம் இல்லாமல் செல்ல முடியும். எனவே, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக நீடிக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am