Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.மு.க.,வுடன் கூட்டணி என்பது அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல; காங்., -எம்.பி., கார்த்தி

  தி.மு.க.,வுடன் கூட்டணி என்பது அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல; காங்., -எம்.பி., கார்த்தி

சென்னை: 'பார்லிமென்டில் காங்கிரசுக்கு தி.மு.க., கூட்டணி தேவை எனபதால், கூட்டணி முடிவானது' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காமல் போனதற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி எம்.பி., போன்றவர்கள் காரணம் என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.
அதற்கு பதில் அளித்து, கார்த்தி கூறியுள்ளதாவது:
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முன், காங்கிரசில் எல்லாரையும் ஆலோசித்த பின்னரே, கூட்டணி வைக்கப்பட்டது. முதலில் எம்.பி.,க்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலர்களை டில்லிக்கு அழைத்து கருத்து கேட்கப்பட்டது. அதன்பின், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகளிடம் தொலைபேசி வாயிலாக கருத்து கேட்டனர்.
அதற்கு பின், தி.மு.க., கூட்டணியில் தொடர வேண்டும் என, எல்லாரும் சொன்ன பிறகு தான், மேலிடம் முடிவெடுத்தது. யாரும் யார் மீதும் திணிக்கவில்லை. எனவே, கூட்டணிக்கு திணித்தனர் என்றும், ராகுல் விருப்பத்திற்கு எதிராக தி.மு.க., கூட்டணி அமைந்தது என்றும் சொல்வது தவறு.
காங்., நிர்வாகிகள், 'தி.மு.க., விடம் கூடுதல் சீட் கேளுங்கள்' என்று தான் கோரிக்கை வைத்தனர். 'தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம்' என யாரும் சொல்லவில்லை. யாருக்கும் பிடிக்காத கூட்டணி வைத்திருந்தால், கடந்த 1996 தேர்தலில் ஏற்பட்டது போல் கட்சி உடைந்திருக்கும்.
இவ்வளவு நாளாக தி.மு.க.,வுடன் பயணித்து விட்டோம். பார்லிமென்டில் தி.மு.க., கூட்டணி தேவை; அவசரத்தில் கூட்டணியை முறிக்க முடியாது என, காங்., அகில இந்திய தலைவர் கார்கே உட்பட எல்லாரும் முடிவு செய்து, முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement