Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறார் விஜய்!

 திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறார் விஜய்!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை, வரும், 18ம் தேதிக்குள் விஜய் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க., தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என, இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே எம்.எல்.ஏ.,வாக இருக்க முடியும் என்பதால், ஏதாவது ஒரு தொகுதி பதவியை, விஜய் ராஜினாமா செய்ய வேண்டும். பெரம்பூர் தொகுதி, சென்னையில் இருப்பதால், தொகுதிக்கு சிரமம் இல்லாமல் செல்ல முடியும். எனவே, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக நீடிக்க விஜய் முடிவு செய்துள்ளார்.

ஆகையால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து, விரைவில் ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், 14 நாட்களுக்குள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இரு பதவிகளும் தானாக காலியாகி விடும். எனவே, வரும், 18ம் தேதிக்குள் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை, விஜய் ராஜினாமா செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
த.வெ.க., தலைவர் விஜய் ராஜினாமா செய்து விட்டால், அங்கு வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில், ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதால், கிழக்கு தொகுதிக்கான வேட்பாளரை கவனமாக தேர்வு செய்ய, த.வெ.க., தலைமை முடிவு செய்துள்ளது.

Advertisement