பழனிசாமி எங்கிருக்கிறார்? தேடிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்
சென்னை: சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் பதவி ஏற்ற முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களுக்கு மட்டுமே, முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோருக்கும், முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்ற எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில், எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என, சட்டசபை செயலக அலுவலர்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரம், அவரது உதவியாளர் வாயிலாக, சட்ட சபை செயலரிடம் கேட்கப்பட்டது. 'எங்கு வேண்டுமானாலும் அமரலாம்' என்று கூறப்பட்டது. ஆனால், முன்வரிசையில் தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்ததால், இரண்டாவது வரிசையில் பழனிசாமி அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. பதவி ஏற்பதற்கு சென்ற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், பழனிசாமிக்கு வணக்கம் வைப்பதற்காக, அவர் இருக்கும் இடம் தெரியாமல், சில வினாடிகள் திணறினர். பதவி ஏற்பதற்கு சென்ற பழனிசாமி, முதல்வர் விஜய்க்கு முன்பாக நின்று, அவருக்கு பின்னால் இருந்த ஜெயலலிதா படத்தை பார்த்து வணங்கினார். பின்னர், எம்.எல்.ஏ.,வாக பழனிசாமி பதவி ஏற்றார். பழனிசாமி வணக்கம் வைத்த போது, முதல்வர் விஜய் வணக்கம் வைக்கவில்லை என, தவறான தகவல்களை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am