Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பழனிசாமி எங்கிருக்கிறார்? தேடிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்

 பழனிசாமி எங்கிருக்கிறார்? தேடிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்

சென்னை: சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது.

நேற்று முன்தினம் பதவி ஏற்ற முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களுக்கு மட்டுமே, முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோருக்கும், முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்ற எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில், எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என, சட்டசபை செயலக அலுவலர்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரம், அவரது உதவியாளர் வாயிலாக, சட்ட சபை செயலரிடம் கேட்கப்பட்டது.

'எங்கு வேண்டுமானாலும் அமரலாம்' என்று கூறப்பட்டது. ஆனால், முன்வரிசையில் தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்ததால், இரண்டாவது வரிசையில் பழனிசாமி அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.

பதவி ஏற்பதற்கு சென்ற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், பழனிசாமிக்கு வணக்கம் வைப்பதற்காக, அவர் இருக்கும் இடம் தெரியாமல், சில வினாடிகள் திணறினர்.

பதவி ஏற்பதற்கு சென்ற பழனிசாமி, முதல்வர் விஜய்க்கு முன்பாக நின்று, அவருக்கு பின்னால் இருந்த ஜெயலலிதா படத்தை பார்த்து வணங்கினார். பின்னர், எம்.எல்.ஏ.,வாக பழனிசாமி பதவி ஏற்றார்.

பழனிசாமி வணக்கம் வைத்த போது, முதல்வர் விஜய் வணக்கம் வைக்கவில்லை என, தவறான தகவல்களை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர்.

Advertisement

மே 12, 2026 04:36 pm

Shri Palaniswamy has himself digged his pit. Keeping aside all personal or ego, should have fought unitedly keeping in view the party which was founded by late CMs instead he derived some of them, interestingly all those who were sent out from AIADMK by Shri Palaniswamy, won and occupy the seats. Even Dharma Yudh also sat some where though he was a CM thrice. More over Palaniswamy had ensured Shri Annamalais removal with the resultant, the so called Jeyalalithaas party stood in third position.

Reply Rate this
மே 12, 2026 11:41 am

வணக்கம் வைக்கல என்பது தவறான தகவல் ன்றால் தாங்கள் அதன் தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ போடா வேண்டியது தானே மலராய்.. மௌனமா..

Reply Rate this

அண்ணாமலை அவர்களை ஒழிக்க நினைத்த பழனிச்சாமி இல்லாமல் போகப்போகிறார்.... அண்ணாமலை அவர்கள் தலைமை பதவியில் இருந்து இருந்தால்.... அதிமுக கூட்டணி வெற்றி பெற்று இருக்கும்.... அண்ணாமலை அவர்கள் பின்னாலும் இளைஞர் கூட்டம் அணி திரண்டார்கள்.... வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில்.... பானையை உடைத்தது போல்....பழனிச்சாமி பேச்சை கேட்டு அண்ணாமலை அவர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டார்கள்.... அது தவறு என்று இப்போது உணர்ந்து இருப்பார்கள் பிஜேபி கட்சியினர்..... அண்ணாமலை அவர்கள் உண்மையான எதிர்கட்சி போல் செயல்பட்டார்.

Reply Rate this
மே 12, 2026 07:19 am

புது முதல்வர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்திருப்பார்பா. சட்டசபைல ஏன் ஏசி எபெக்ட் கம்மியா இருக்குனு யோசிக்க வேண்டாமா?! விடுங்கப்பா எதுக்கு வணக்கம் கிணக்கம்னு சொல்லிகிட்டு..

Reply Rate this
மே 12, 2026 06:37 am

தவரான தகவல் அல்ல
வீடியே லை பாக்கவும்

Reply Rate this
மே 12, 2026 06:28 am

பழனிச்சாமி மரியாதைக்காக வணக்கம் வைத்தது முதல்வர் விஜய்க்கு தான். விஜய்க்கு பின்னால் அமர்ந்திருக்கும் த.வெ.க எம்.எல்.ஏ கூட எடப்பாடியாருக்கு பதில் வணக்கம் சொல்வார். அந்த புதிய எம்.எல்.ஏவுக்கு தெரிந்த நாகரிகம் கூட புதிய முதல்வருக்கு தெரியாதது மிகவும் வருத்தத்திற்கு உரிய விசயமே.

Reply Rate this
மே 12, 2026 06:22 am

எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என்றில்லாமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமிக்கு முன் வரிசையில் அல்லவா இடம் ஒதுக்கி இருக்க வேண்டும்?

Reply Rate this