திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெறுவாரா?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தி ருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க., சார்பில் கல்லுாரி அதிபர் ராஜசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும், தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர். ஆனால், நட்சத்திர வேட்பாளரான விஜயின் த.வெ.க.,வினர் நிலைமை பரிதாபமாக உள்ளது. மாலை நேரங்களில், 20 பேர் மட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பிரசாரத்தையும் மக்கள் கண்டுகொள்வதில்லை. அந்த தொகுதியில் மட்டும் தான், த.வெ.க.,வில் மாவட்ட செயலர், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலர், வட்ட செயலர் என ஒருவரைக் கூட நியமிக்கவில்லை. இதனால் கட்சியினரை ஒருங்கிணைக்க முடியவில்லை. இதுவும் விஜய்க்கான பிரசாரம் எடுபடாமல் போனதற்கு காரணம். இப்படிப்பட்ட சூழலால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எட்டாக்கனியாகி விடுமோ என கட்சியினர் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து, த.வெ.க.,வினர் கூறுகையில், 'தேர்தல் அலுவலகத்தை கூட முறையாக திறக்கவில்லை. அதையும் திறந்ததோடு சரி. வேறு எந்த வேலையும் நடக்கவில்லை. இப்படியே போனால், இந்த தொகுதி கைநழுவிப் போனாலும் ஆச்சரியமில்லை' என்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am