அடிப்படை பிரச்னைக்கு தீர்வு த.வெ.க. வேட்பாளர் உறுதி
திருப்பூர்: தாராபுரம் சட்டசபை தொகுதி, மூலனுார் பகுதி களில் ஓட்டு சேகரித்து மக்களிடம் பேசிய த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா பேசியதாவது:
தொகுதியில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள்சரிவர ஒளிர்வதில்லை. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கல்வி வசதி குறைவாக இருக்கிறது.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் தேவைக்கேற்ப இல்லை. வீட்டுமனைப் பட்டா வழங்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் தென்படுகின்றன.
ஓட்டு சேகரிக்க செல்லும் பல இடங்களில் இத்தகைய குறைகளை மக்கள் முன்வைக்கின்றனர். நான் வெற்றி பெற்றால் இதுபோன்ற அடிப்படை பிரச்னைகளை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.
மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளிலும் கவனம் செலுத்துவேன்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்