Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


  திருப்பூரை மேம்படுத்திய தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் பெருமிதம்

  திருப்பூரை மேம்படுத்திய தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் பெருமிதம்

திருப்பூர்: ''திருப்பூரை மாவட்டம், மாநகராட்சி என தரம் உயர்த்தி அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்திய தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்'' என தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் பிரசாரம் செய்தார்.

திருப்பூர் தெற்கு தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் நேற்று காலை தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், தணிகை நகர், சாரதா நகர், எம்.ஜி.ஆர். நகர், திரு,வி.க. நகர், காமாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைகளில் கட்சிக் கொடிகளுடனும், துண்டுப் பிரசுரம் வழங்கியும் ஓட்டு சேகரித்தனர்.

தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிளை நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் பின்னர், இந்திய தேசிய லீக், சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மேலும், திருநகர், மணியகாரம்பாளையம், வள்ளியம்மை நகர், காளியப்பா நகர் ஆகிய பள்ளி வாசல்களில் தொழுகைக்கு வந்து சென்றோரைச் சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

பிரசாரத்தில் நேற்று மாலை, கொங்கணகிரி பகுதியில் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். வாக்காளர்கள் மத்தியில் தினேஷ்குமார் பேசியதாவது: திருப்பூர் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது வளர்ந்து வரும் தொழில், வேலை வாய்ப்புகள், மக்கள் தொகைக்கு ஏற்ப தொலை நோக்கு திட்டங்கள் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, பாலங்கள், வடிகால், பாதாள சாக்கடை, ரோடுகள் என நகரின் வசதிகள் இந்த ஆட்சிக் காலத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நகருக்கு கொண்டு வர மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். உதய சூரியனுக்கு வாக்களியுங்கள். மக்கள் நலத்திட்டங்கள் மக்கள் எண்ணங்களுக்கு ஏற்ப கொண்டு வரப்படும்.

Advertisement