Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெறுவாரா?

 திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெறுவாரா?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தி ருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க., சார்பில் கல்லுாரி அதிபர் ராஜசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும், தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்.

ஆனால், நட்சத்திர வேட்பாளரான விஜயின் த.வெ.க.,வினர் நிலைமை பரிதாபமாக உள்ளது. மாலை நேரங்களில், 20 பேர் மட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பிரசாரத்தையும் மக்கள் கண்டுகொள்வதில்லை.

அந்த தொகுதியில் மட்டும் தான், த.வெ.க.,வில் மாவட்ட செயலர், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலர், வட்ட செயலர் என ஒருவரைக் கூட நியமிக்கவில்லை. இதனால் கட்சியினரை ஒருங்கிணைக்க முடியவில்லை. இதுவும் விஜய்க்கான பிரசாரம் எடுபடாமல் போனதற்கு காரணம்.

இப்படிப்பட்ட சூழலால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எட்டாக்கனியாகி விடுமோ என கட்சியினர் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து, த.வெ.க.,வினர் கூறுகையில், 'தேர்தல் அலுவலகத்தை கூட முறையாக திறக்கவில்லை. அதையும் திறந்ததோடு சரி. வேறு எந்த வேலையும் நடக்கவில்லை. இப்படியே போனால், இந்த தொகுதி கைநழுவிப் போனாலும் ஆச்சரியமில்லை' என்றனர்.

Advertisement

ஏப் 12, 2026 05:42 pm

இந்த தொகுதி மட்டுமல்ல எல்லா தொகுதியும் தவெக நிலை இது தான். விஜய் வரும் போது கட்டுக்கடங்காத கூட்டம் வருவது உண்மை, இளம் வாக்காளர்கள் மற்றும் ஓரளவு சிறுபான்மையினர் விஜய் பக்கம் இருக்கிறார்கள். 15 முதல் 20 சதவீதம் வரை ஓட்டுக்கள் பெற்று அனைத்து தொகுதியிலும் தவெக தோல்வியையே தழுவும்.

Reply Rate this
ஏப் 12, 2026 12:32 pm

ஜனநாயகன் லீக் யார் மூலம்?

Movie piracy வேறு, இது வேறு. Edit Reference Mark உடன் ஜனநாயகன் படம் லீக் ஆகி இருப்பது, இது Personal Copy என்பதற்கான தெளிவான அடையாளம்.

தியேட்டர் Copy எனப்படும் Piracy Version இல் இப்படிப்பட்ட Edit Reference Mark இருப்பதில்லை. இந்த மாதிரி Personal Copy தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், எடிட்டர் ஆகிய இந்த நால்வரிடம் மட்டுமே இருக்கும் என்பது Cinema Industry Protocol.

அப்படியானால், படத்தின் லீக் இவர்கள் நால்வரில் ஒருவர் மூலமே நடந்திருக்க வேண்டும்.

Reply Rate this
ஏப் 12, 2026 11:36 am

தமிழகத்தில் குடி நோய் அதிகரித்து உள்ளது. மிக பெரிய நடிகரில் இருந்து சாதாரண மனிதன் வரை. அதனால் அவர்கள் சரியான வாழ்க்கையை வாழ முடியவில்லை. அரசியலில் தீவிரவமாக ஈடுபட ஒழுங்கான வாழ்க்கை முறை தேவை.

குடி உடல் வலிமையை சீரழித்து தூக்கத்தில் ஆழ்த்தி தங்கள் செய்யவேண்டிய பரப்புரையை கூட செய்யமுடியாத நிலைமையை பலருக்கு உண்டாக்கி உள்ளது. இதனால் பல ப்ரோக்ராம்கள் ரத்து செய்வதை பார்க்கிறோம்.

Reply Rate this

அரசியல் பகுதி நேர தொழில் என்று நினைத்துவிட்டார். மேலும் வீட்டுக்காரரை விட விஜயை ரொம்போ பிடிக்கும் என்று சொல்லும் பெண்மணிகள் தமிழகம் முழுதும் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று ஒரு மிதப்பு இருக்கு அவருக்கு. அது போன்ற பெண்கள் அத்துணை லட்சம் பேரும் இவருக்கு வாக்களித்துவிடுவார்கள் என்ற கர்வமும் இருக்கு. ஆனால் மே நாலாம் தேதி மிக மிக பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்படுவர். இப்போது போல அப்போதும் பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டார். ஒரு வீடியோ வெளியிடுவார் ஒரு நான்கு நாட்களுக்கு பிறகு. அதில் ஒழுங்காக நடித்து நல்ல வசனங்களாக பேசி மறுபடி சினிமாவுக்கு நடிக்க போய்விடுவார்.

Reply Rate this
ஏப் 12, 2026 10:05 am

திருச்சி மட்டும் என்ன தவெக போட்டி இடும்... அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் காலி

Reply Rate this
ஏப் 12, 2026 09:52 am

அந்த திருச்சி தொகுதியில் மதம் மாற்றும் கும்பல் கல்லூரிகள் நிறைய இருக்குதாம் ......அதில் ஒரு கல்லூரி திராவிட விடியல் சமூக நீதி வரலாற்றில் பின்னி பிணைந்தது ...........


.அந்த கல்லூரியும் இப்பொது மத சார்பின்மை விடியல் கட்சிக்கு எதிராக நடிகனுக்கு ஆதரவாம் .....


கல்லூரி நிர்வாகம் நடிகனுக்கு ஆதரவாக விடியலுக்கு வேட்டு வைக்க மாணவர்களை தூண்டி விடுதாம் ...

Reply Rate this
ஏப் 12, 2026 08:02 am

அவரே ஜோசப் விஜய் என்றுதான் நாமினேஷன் பைல் செய்துள்ளார். நீங்கள் மட்டும் ஏன் விஜய் என்றே போடுகிறீர்கள். அவருடைய உண்மையான முகத்தை வெளிகொண்டு வருவதில் உங்களுக்கு என்ன சிக்கல். இதுவரை தன்னுடைய படங்களில் ஜோசப் என்கிற பெயரை மறைத்து வெறும் விஜய் என்கிற பெயரில் புகழை சம்பாதித்தவன் தற்போது நாமினேஷனில் உண்மையான பெயரை சொல்லவேண்டியதாகி விட்டது. அவன் பிரசாரத்தில் தன்னை ஜோசப் விஜய் என சொல்லட்டும் தற்போது விழும் ஓட்டில் பாதிகூட தேறாது

Reply Rate this

, ஜெயிக்க போவது ஜோசப்

Reply Rate this
ஏப் 12, 2026 07:00 am

நீங்கள்தான் அடுத்த எம்.ஜி.ஆர் என்று சுற்றி உள்ளவர்கள் வேண்டுமானால் விஜயை உசுப்பேத்தலாம். ஆனால் படுத்துக் கொண்டே ஜெயிக்க விஜய் ஒன்றும் எம்.ஜி.ஆர் அல்ல. தனது தொகுதியில் கூட பிரச்சாரம் செய்வதில் விஜய் ஆர்வம் காட்டாமல் மெத்தனமாக இருந்தால் திருச்சி கிழக்கில் விஜய் தோல்வி அடைவது உறுதி.

Reply Rate this
ஏப் 12, 2026 06:47 am

மதம் மாற்றும் கும்பல் கணிசமாக உள்ள தொகுதி ....அதுக்கும் மேலே அந்த கும்பல் சொந்த ஜாதி கும்பலாம் ....அதனால் வோட்டுகள் தானாக வந்து விழும் ....

Reply Rate this