Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜய் தலைமையில் உருவாகிறது மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி

விஜய் தலைமையில் உருவாகிறது மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி

சென்னை: 'ஆதரவு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து, பொதுக்கூட்டம் நடத்த, த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது.

பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சி அமைக்க தடுமாறிய த.வெ.க.,வுக்கு, தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., - கம்யூ., கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு கொடுத்தன. இதனால், த.வெ.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து, விஜய் முதல்வரானார்.

இந்நிலையில், தனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுடன் இணைந்து, பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இந்த பொதுக்கூட்டம், ஆதரவு கட்சிகளை, த.வெ.க., கூட்டணி கட்சிகளாக அறிவிக்கும் விதமாக ஏற்பாடு நடக்கிறது.

த.வெ.க.,வின் மிக முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும், இந்த பொதுக்கூட்டம், வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக, தனது ஆஸ்தான ஜோதிடரிடம், நல்ல நாளை கணித்து கொடுக்கும்படி, முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே, பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கோவை சிறுமி பாலியல் வழக்கு, மின் தடை பிரச்னை உள்ளிட்டவையால், நடத்த முடியவில்லை.

இந்த பொதுக்கூட்டத்தில், த.வெ.க., கூட்டணிக்கு, 'மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி' என பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மே 26, 2026 05:39 am

ஜோசப் விஜய் என்று மேடையில் பேசுவார் , தன் கூட்டணியில் மத கட்சியான முஸ்லீம் லீக் க்கு இடம் கொடுப்பார் , தமிழக சட்ட சபையில் பைபிளை படிக்க வைப்பார். மத ரீதியில் இதெல்லாம் செய்துவிட்டு தான் மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி என்று முழங்குவார். இவரை மட்டும் நம்பி தவேகவுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்கள் இவர் கட்சி மதச்சார்பற்ற கட்சி என்று நம்பவும் வைப்பார். இவர் மேல் பைத்தியம் பிடித்து அலையும் தற்குறி மக்களும் இதை நம்புவார்கள்.
தமிழிகத்தை அழிவு பாதையில் கொண்டு செல்கிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது.

Reply Rate this
மே 25, 2026 10:18 pm

முஸ்லிம் லீக் ஒரு மத கட்சி கிடையாதா? விசிக ஒரு ஜாதி கட்சி கிடையாதா?

Reply Rate this
மே 25, 2026 08:06 pm

3 மத வாத கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு ,மத சார்பற்ற கூட்டணி அமைக்க போகிறார்களாம். மத்திய அரசை எதிர்த்து மதவாத கட்சிகள் எல்லாம் ஒரு இண்டி கூட்டணி அமைத்தார்களே, அதைப் போலத்தான் இதுவும் விளங்கும்.

Reply Rate this
மே 25, 2026 08:05 pm

மதச்சார்பின்மை பற்றி பேசுவோர் யாராக இருந்தாலும், முதலில் தங்கள் மதத்தில் உள்ள பற்றை ஒழிக்க வேண்டும். தங்கள் மதத்தின் மீதான பற்றை ஒழிக்காமல், மற்றவர்களிடம் மதச்சார்பின்மை பற்றி பேசுவது நல்ல வேடிக்கை!!

Reply Rate this
மே 25, 2026 05:44 pm

மதச்சார்பற்ற என்றால் அக்கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் இல்லை தானே.

Reply Rate this
மே 25, 2026 01:59 pm

இதெற்கெல்லாம் பணம் இருக்க விஜய், அரசாங்க பள்ளிக்கூடங்களை சீரமைக்க பணம் அரசாங்கத்திடம் இல்லை. வெட்கக்கேடு.

Reply Rate this

இவன் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த எந்த ஆணியையும் இவரால் பிடுங்க முடியவில்லை அதனால் புதியதாக மக்களை ஏதோ ஒரு குழப்பத்தில் வைப்பதற்காக ஒரு கூட்டணி என்ற யோசனை வந்திருக்கிறது மதச்சார்பற்ற என்ற பொய்யை தமிழக இந்துக்கள் எத்தனை காலம் நம்பி ஏமாறப் போகிறார்களோ தெரியவில்லை

Reply Rate this
மே 25, 2026 12:45 pm

தினமலர் போன்ற தரமுள்ள நாளிதழ்கள் இது போன்ற அறிக்கைகளை செய்திகளாக வெளியிட்டு தரத்தை தாழ்த்தி கொள்ள வேண்டாம் . தமிழ்நாட்டிற்கு மதம், ஜாதி, மொழியோ , இனமோ இப்போதைக்கு அவைகள் இருக்க ஏவேண்டிய இடத்தில நன்றாகவே இருக்கிறது இப்போது தேவை இளைஞர்களுக்கு நல்வழி, நற்சிந்தனை, ஜீவாதார, பொருளாதாரம் வாழ்வாதாரம். பொதுவாக மக்களுக்கு நல்ல கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு , ஊழலில்லா அரசாங்கம் அன்றாடம் அறிக்கைகள் விளம்பரங்கள் தேவை இல்லை. கொலை, கொள்ளை, போதை பொருள், கற்பழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, ரேஷன் பொருட்கள், மழை வெள்ளம், புயல் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை , மக்கள் வரி பணம் வரவு ஏசெலவு வெள்ளை அறிக்கை கொடுக்க ம்முடியுமா , விளம்பரம், அதிரடி அறிவிப்பு, சமூக நீதி இவை எல்லாம் நன்றாகவே இருக்கிறது

Reply Rate this
மே 25, 2026 12:10 pm

திரவிஷமும் இப்படிப்பட்ட கூட்டணித்தான்.. ஒரே ஒரு வித்தியாசம்.. அதில் திமுக என்ற பிரதான விஷம் இருந்தது.. இந்த புதிய கூட்டணியில் திமுக என்ற விஷத்திற்கு பதிலாக மற்றோன்று நஞ்சு.. அவ்வளவுதான்..

Reply Rate this
மே 25, 2026 12:05 pm

ஹிந்துமதச்சார்பற்ற - இஸ்லாமிய கிறிஸ்த்துவ கூட்டணி என்று பெயர் வைப்பதே கனகச்சிதமாக பொருந்தும் ... மதம் சார்ந்து இருக்கக்கூடாது என்பது ஹிந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மதம் பற்றி ஒரு ஹிந்து பேசினால் மத வெறியர்கள், சங்கிகள் என்று அழைக்கப்படுவார்கள்.. இஸ்லாமியர்கள் துவா செய்து பதவி ஏற்கலாம். சநதனத்தை ஒழிப்போம் என்று இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் பேசலாம்.. கிறிஸ்த்துவ கோட்பாடுகளை மேற்கோள்காட்டி சட்டசபையை தேவாதிருச்சபையாக்கி பேசலாம்..எந்த ஒரு பொது இடத்தையும் ஆக்ரமித்து திருச்சபைகள் அமைக்கலாம் தினமலர் - திருச்செந்தூர் செய்தி.. ஹிந்துக்களை பற்றியும், ஹிந்து ஆலயங்கள் பற்றியும் ஆபாசமாக பேசும், குல்லா போட்டுக்கொண்டு கஞ்சி குடித்து, சிலுவை அணிந்து கேக் சாப்பிட்டு வேஷம் போட்டு ஊரை ஏமாற்றி திரியும் திருமாவளவன் கட்சி, பெயரில் முஸ்லீம் வைத்து உள்ள முஸ்லீம் லீக் கட்சி இவைகள் உள்ள கூட்டணி.. OLD WINE IN NEW BOTTLE.

Reply Rate this