தி.மு.க., கவுன்சிலர் கொலை சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது
திருச்சி: திருச்சி அருகே தி.மு.க., கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், சோழமாதேவியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 42; தி.மு.க., நிர்வாகியான இவர், கூத்தைப்பார் பேரூராட்சி கவுன்சிலராக வும் இருந்தார். திருவெறும்பூரில் பார் நடத்தி வந்த இவர், மார்ச் 30ம் தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நவல்பட்டு போலீசார் கொலையாளிகளை தேடிய நிலையில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில், பைக்கில் வந்த இருவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. தீவிர விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த மணி, 36, என்ற ரவுடிக்கு, பாரில் இருந்து மாமூல் தராத ஆத்திரத்தில் கொலை நடந்தது தெரிந்தது.
இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட, மூன்று சிறுவர்கள், திருவெறும்பூரைச் சேர்ந்த மதன், ஹரிஹரன், கிரி, நாகராஜ், சஞ்சய், ரெக்ஸ் லாரன்ஸ், சுரேஷ், சுரேன்குமார் ஆகிய, 11 பேரை போலீசார் கைது செய்த னர். முக்கிய குற்றவாளி யான ரவுடி மணியை தேடுகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்