செந்தில்பாலாஜி போட்டியிடும் தொகுதியில் 17 மனு தள்ளுபடி
கோவை: கோவை தெற்கு தொகுதியில், 53 வேட்பாளர்கள் 61 வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன.
15 வேட்பாளர்களின் 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 38 வேட்பாளர்களது 44 மனுக்கள் ஏற்கப்பட்டன.
தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனில், 9ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். கூடுதலாக பெறப்பட்ட 6 மனுக்கள், நாளைக்குள் திரும்ப பெறப்படும்.
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
பேலட் ஷீட்டில் 16 பட்டன்கள் உள்ளன. கடைசி பட்டன் 'நோட்டா'. 15 வேட்பாளர்களின் பெயர்கள் சின்னத்துடன் அச்சிடப்படும். தற்போதுள்ள நிலையில், 38 வேட்பாளர்கள் உள்ளனர்.
7 வேட்பாளர்கள், மனுக்களை வாபஸ் பெற்றால், 31 வேட்பாளர்கள் போட்டியில் இருப்பர். நோட்டாவை சேர்த்து, 32 பட்டன் தேவை. 2 மெஷின்கள் போதும்.
ஒரு வேட்பாளர் கூடினாலும், மூன்று மெஷின்கள் தேவை.
கோவை தெற்கு தொகுதியில், 283 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். 20 சதவீதம் 'ரிசர்வ்' அடிப்படையில் 339 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், 30 சதவீதம் 'ரிசர்வ்' அடிப்படையில் 369 விவி பேட் இயந்திரங்கள் பெறப்பட்டு, பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்ற பின், வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர். சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.
இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் தேவையான கூடுதல் இயந்திரங்கள், தேர்தல் ஆணைய கிடங்கில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்