Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 234 தொகுதிகளுக்கு 2,956 மனு தாக்கல்

 234 தொகுதிகளுக்கு 2,956 மனு தாக்கல்

சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட, 234 தொகுதிகளுக்கு 2,956 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம் தேதி துவங்கியது. மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி அரசு பொது விடுமுறை நாள். அன்றைய நாட்களில் வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை.

இதை தொடர்ந்து, 2ம் தேதி மனுக்கள் பெறப்பட்டன. புனித வெள்ளி என்பதால், 3ம் தேதியும் மனுக்கள் பெறப்படவில்லை. நேற்று வேட்பு மனுக்கள் மீண்டும் பெறப்பட்டன.

இந்த மூன்று நாட்களில் மொத்தமாக 2,956 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பலர் தங்கள் பெயர்களில் கூடுதல் மனுக்களை இணைத்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருநங்கை ரோஷினி என்பவர் வேட்பு மனு செய்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று, வேட்பு மனு தாக்கல் இல்லை. வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்.

சென்னை நிலவரம் சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள், மாநகராட்சியின் மண்டல அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரியால் பெறப்பட்டன.

தி.மு.க., - நா.த.க., - த.வெ.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 281 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக தி.நகர் தொகுதியில் 28; ராயபுரம் 27; ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் தலா, 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்துார் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

'சர்வர்' கோளாறு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலியான, 'ஜி-பே' வாயிலாக, பொதுத் தொகுதிக்கு 10,000; தனித்தொகுதிக்கு, 5,000 ரூபாய் என டிபாசிட் தொகையை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நேரத்தில், தமிழகத்தின் பல சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய குவிந்தனர்.

இதனால், 'சர்வர்' வேலை செய்யாமல், 'ஜி-பே' வாயிலாக 'டிபாசிட்' பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தொகுதி தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர். அவர்கள், சென்னை தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது சர்வர் வேலை செய்யாதது உறுதியானது.

இதனால், மதியம் 2:00 மணி வரை பணம் கட்ட முடியாமல் வேட்பாளர்கள் காத்திருந்தனர். 3:00 மணிக்கு மேல் சர்வர் சரியானதால், டிபாசிட் தொகையை செலுத்தி ரசீது பெற்றனர்.

Advertisement