பரமக்குடியில் 75 பவுன் நகை பறிமுதல்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டசபை தொகுதி ராமகிருஷ்ண பிரபு தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த பொற்செல்வன் மனைவி சசிரேகா உரிய ஆவணங்கள் இன்றி காரில் 75 பவுன் தங்க நகை கொண்டு சென்றார்.
சுமார் 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகை கைப்பற்றப்பட்டு, பரமக்குடி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளை மீட்டு செல்லலாம் என தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்