Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தலையெழுத்தை மாற்றிய ஒரு ஓட்டு! திமுக அமைச்சர் பெரியகருப்பன் தோல்வி

தலையெழுத்தை மாற்றிய ஒரு ஓட்டு! திமுக அமைச்சர் பெரியகருப்பன் தோல்வி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிவகங்கை: திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் பெரியகருப்பனை (83,364 ஓட்டு), தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி (83,365 ஓட்டு), ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கடைசி சுற்றுக்கு முன், அமைச்சர் பெரிய கருப்பன் 30 ஓட்டுகள் முன்னிலை பெற்ற நிலையில், கடைசி சுற்று ஓட்டு எண்ணிக்கையில், ஒரு ஓட்டு முன்னிலை பெற்று, தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, வெற்றி பெற்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி, திமுக.,வின் கோட்டையாக இருந்துள்ளது. அங்கு இதுவரை 8 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2006 முதல், தொடர்ந்து 4 முறை, அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று, இருமுறை அமைச்சராகவும் இருந்த பெரியகருப்பன் தற்போது ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

Advertisement