Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'செய்வதை தான் சொல்வோம்' அ.தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கை

 'செய்வதை தான் சொல்வோம்' அ.தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கை

கோவில்பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், வடக்கு மாவட்ட செயலாளருமான அருண்குமார், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், கோவில்பாளையம் உட்பட, 40 இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசியதாவது:

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதியில், ஏழை, எளிய மக்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டி தரப்படும்.

குளிர்சாதன பெட்டி வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம், 150 நாட்களாக உயர்த்தி சம்பளமும் உயர்த்தி தரப்படும். தாமதமாக வழங்கப்படும் சம்பளம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

ஆனால், தி.மு.க., சொன்னது வேறு; செய்தது வேறு, அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துவிட்டு பாதி பேருக்கு தரவில்லை. தி.மு.க., போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு செல்கின்ற கட்சி. எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., அப்படியல்ல. சொல்வதை தான் செய்வோம்; செய்வதை தான் சொல்வோம். இவ்வாறு, அவர் பேசினார். அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க.,வின் வாக்குறுதிகள் மற்றும் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

Advertisement