கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் இறுதி கட்ட பிரசாரம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி நேற்று அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேலம் ரோடு, கவரை தெரு, காந்தி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இறுதி கட்ட பிரசாரத்தை முடித்து பேசியதாவது; அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் குலவிளக்கு திட்டத்தின் கீழ் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். ஆண்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் வசதி, 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தி வழங்கப்படும்.
கல்வி கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள், மகளிருக்கு வட்டியில்லா கடன், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்துதல் என அ.தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும். தி.மு.க., பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வருகிறது. எனவே, யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று மக்கள் சிந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டளிக்க வேண்டும் என கூறினார்.
இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, முன்னாள் எம்.பி., காமராஜ், ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், பாசறை செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உட்பட அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ., அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்