அமித் ஷா வரும் 19ல் சென்னையில் பிரசாரம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 19ம் தேதி சென்னை மயிலாப்பூர், ஆவடி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
பா.ஜ., தேசியத் தலைவர் நிதின் நபின், கடந்த இரு தினங்களாக தமிழகத் தில் பா.ஜ., வேட் பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரியில் நாளையும், வரும் 18ம் தேதி கோவையிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவும், தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார்.
வரும் 19ம் தேதி சென்னை வரும் அமித் ஷா, ஆவடி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ராஜசிம்ஹா மஹிந்திரா அஸ்வின்குமாரையும், மயிலாப்பூரில் போட்டியிடும் வேட்பாளர் தமிழிசையையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்