Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'அண்ணா இது உனக்காக': என்.ஆர்.ஐ.,யால் கட்சிகள் கலக்கம்

 'அண்ணா இது உனக்காக': என்.ஆர்.ஐ.,யால் கட்சிகள் கலக்கம்

விஜய் தலைமையிலான த.வெ.க.,விற்கு ஓட்டு போடுவதற்காக, வெளிநாடுகளில் வசிக்கும் பலர், இம்முறை சொந்த ஊருக்கு வரப்போவதாக, சமூக வலைதளங்களில் நேரடியாக பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த தேர்தல்களில், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், தேர்தல்கள் குறித்து தங்கள் கருத்துகளை மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

நேரடியாக பங்கேற்பது அரிதாகவே காணப்பட்டது. ஆர்வம் இருந்தாலும், பயண செலவு, வேலைவாய்ப்பு சிக்கல்கள் போன்ற காரணங்களால் வராமல் இருந்தனர்.

இம்முறை, அத்தகைய தடைகளை தாண்டி, ஆயிரக்கணக்கில் செலவிட்டு ஓட்டு போட வர இருப்பது, பிற கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

'அண்ணா இது உனக்காக' என, பலர் பயண டிக்கெட்டை மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். துபாய், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, குவைத், ஓமன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வர தயாராகி வருகின்றனர்.

கடந்த தேர்தல்களை காட்டிலும், இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்.ஆர்.ஐ., மக்களின் வருகை, தேர்தல் அரசியலில் ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement