Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஓட்டு பெட்டி காவல் பணியில் சுணக்கம்: த.வெ.க., வேட்பாளர்கள் மீது புகார்

 ஓட்டு பெட்டி காவல் பணியில் சுணக்கம்: த.வெ.க., வேட்பாளர்கள் மீது புகார்

சென்னை: ''ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் த.வெ.க.,வினருக்கு, வேட்பாளர்கள் தரப்பில் இருந்து, எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை,'' என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும், கடந்த 23ம் தேதி நடந்த தேர்தலில் ஓட்டுகள் பதிவான மின்னணு இயந்திரங்கள், மாநிலம் முழுதும் 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியினர், நா.த.க., - த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், சுயேச்சை வேட்பாளர்களும், தங்கள் சார்பில், ஓட்டு பெட்டிகளை பாதுகாக்கும் பணிக்கு ஆட்களை நியமித்துள்ளனர்.

அந்த வகையில், த.வெ.க., சார்பில், ஒரு குழுவுக்கு 8 மணி நேரம் என்ற அளவில் மூன்று 'ஷிப்ட்' முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ஓட்டு பெட்டிகள் பாதுகாப்புக்கு, த.வெ.க.,வில் ஒரு மையத்துக்கு ஒரு 'ஷிப்ட்'க்கு 14 பேர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட செலவுகளை வேட்பாளர்கள்தான் ஏற்க வேண்டும்.

எங்கள் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கான ஓட்டு இயந்திரங்கள், சென்னை லயோலா கல்லுாரியில்தான் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் த.வெ.க.,வினருக்கு உணவு, தேநீர் உள்ளிட்ட எல்லா உதவிகளும் கிடைக்கின்றன. ஆனால் தேனி, மதுரை, திருப்பூர், கோவை, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மையங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு உணவு கூட சரியாக வழங்கப்படவில்லை.

தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகள், தங்கள் கட்சியினருக்கு தாராளமாக செலவு செய்கின்றன. ஆனால், த.வெ.க.,வில் உணவு கூட ஏற்பாடு செய்யப்படுவதில்லை. இதனால், மையங்களில் த.வெ.க.,வினர் முழுமையாக பணியில் இருப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

ஏப் 28, 2026 01:13 pm

தவெக 233 வேட்பாளர்களும் ஜோசப் விஜய் அளித்த ராஜவிருந்து உணவு வகைகளை உண்ண மயக்கத்தில் இருக்கின்றனர்.

Reply Rate this