தமிழ் மொழிக்கு எதிரானது பா.ஜ.,: காங்., ஆவேசம்
கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லுார் தொகுதி காங்., வேட்பாளர் ஸ்ரீநிதியை ஆதரித்து, அக்கட்சி பொதுச் செயலர் வேணுகோபால் பேசியதாவது:
பா.ஜ.,வும், தே.ஜ., கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தை அடிமையாக மாற்ற முயற்சி செய்கின்றனர். தமிழக அரசு நிர்வாகத்தை தங்களது 'ரிமோட்' மூலம் இயக்க பா.ஜ., நினைக்கிறது.
ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதில், தி.மு.க., அரசு தெளிவாக உள்ளது.
பா.ஜ.,வும் பிரதமர் மோடியும் மக்களைப் பிளவுபடுத்துகின்றனர். தமிழ் மொழிக்கும் மக்களுக்கும் பா.ஜ., எதிரானது. தமிழகத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.,வின் எண்ணம். தமிழக மக்களுக்கு எதிராக பா.ஜ., உள்ளது. இவ்வாறு பேசி னார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்