குற்றவாளிகளை காப்பாற்றும் பாஜ: கனிமொழி குற்றச்சாட்டு
தூத்துக்குடி: தேசிய அளவில் ஒப்பிடுகையில் பாஜ ஆளும் மாநிலங்களில் குற்றம் அதிகம் நடக்கிறது. குற்றவாளிகளை காப்பாற்றும் அரசாக பாஜ உள்ளது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வாக்குறுதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என மக்கள் காத்திருக்கிறார்கள். ஆவலாக இருக்கிறார்கள். ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.ஸ்டாலின்தலைமையில் ஆட்சி அமையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தூத்துக்குடிக்கு அதிக வளர்ச்சி ஏற்படுத்தி வருவோம்.
வேட்பாளர்களை மாற்றி அறிவிக்கும்போது மன தளர்வு இருக்கும். கூட்டணி பேசும் போது சர்ச்சை உருவாகும். கருத்தால் ஒன்றுபட்டவர்கள். ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். வெற்றியை இணைந்து பணியாற்றுவோம். புதியவர்களை வேட்பாளர்களை அறிவித்தாலும் திமுகவினர் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றியை தேடித்தருவோம்.
தேசிய அளவில் தமிழகத்தில் குறைவாக தான் குற்றஙங்கள் உள்ளது. குற்றம் நடந்தாலும் கூட நடவடிக்கை எடுக்கும் அரசாக திமுக உள்ளது. நியாயம் கிடைக்கும் ஆட்சியாக இருக்கிறது.தேசிய அளவில் ஒப்பிடுகையில் பாஜ ஆளும் மாநிலங்களில் குற்றம் அதிகம் நடக்கிறது. குற்றவாளிகளை காப்பாற்றும் அரசாக பாஜ உள்ளது. குற்றங்களை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு கனிமொழி கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்