Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


த.வெ.க.,வுக்கு தாவும் பா.ஜ., இளைஞர்கள்: அண்ணாமலை என்ன முடிவெடுப்பார்?

த.வெ.க.,வுக்கு தாவும் பா.ஜ., இளைஞர்கள்: அண்ணாமலை என்ன முடிவெடுப்பார்?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மதுரை: தேர்தல் முடிவுகளால் துவண்டு போன பா.ஜ.,வைச் சேர்ந்த இளைஞர்கள் த.வெ.க.,வுக்கு மாறி வருகின்றனர். அண்ணாமலை போன்ற இளம் தலைமுறை தலைவர்களால்தான் இந்நிலையை மாற்ற முடியும் என பா.ஜ.,வினர் கருதுகின்றனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்பாராத வகையில் இருபெரும் திராவிட கட்சிகளை வென்று த.வெ.க., ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ., ஏற்கனவே இருந்த 4 சீட்களில் 3 ஐ இழந்து ஒரே ஒரு சீட்டில் வென்றதால் செய்வதறியாது திகைப்பில் மவுனித்துள்ளது.

சந்தித்த முதல் தேர்தலிலேயே த.வெ.க., வென்றதால் அக்கட்சியின் வெற்றிக்கு இளைஞர்களிடையே கிடைத்த வரவேற்பும், சமூகவலைத் தளமும்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு எந்தக் கட்சியிலும் நம்பிக்கை அளிக்கக் கூடிய இளைய தலைமுறை தலைவர்கள் யாரும் இல்லாதது பெரும்குறையாக பார்க்கப்படுகிறது.

இவ்வகையில் சினிமா பிரபலத்துடன், புதிய மாற்றம் வேண்டியவர்களும் சேர்ந்து மற்ற கட்சிகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டதாக கருதுகின்றனர்.

பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, இளந்தலைமுறையை சேர்ந்தவர், ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தவர், திராவிட கட்சிகளுக்கு குடைச்சல் கொடுத்தவர் என்ற காரணங்களால் பா.ஜ.,வுக்கு பெரும் எழுச்சியாக இருந்தார். அ.தி.மு.க., கூட்டணிக்காக அவரை பதவியில் இருந்து இறக்கியதை கட்சியில் இளந்தலைமுறையினர் பலரும் ரசிக்கவில்லை.

எனவே இப்போது பெருந்தோல்வியை பெற்றதால், இளைஞர்கள் பலரும், குறிப்பாக அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் த.வெ.க.,வுக்கு தாவி வருகின்றனர். பலர் அதிருப்தியில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் விளையாட்டுப் பிரிவு உட்பட சில அணிகளில் இருந்த இளைஞர்கள் பலர் நாமக்கல் சென்று த.வெ.க., அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகனால் கட்சியில் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் சிலரே கட்சி தாவி உள்ளனர். சித்தாந்த அடிப்படையில் உள்ள இளைஞர்கள் இன்னும் பா.ஜ.,வில்தான் தொடர்கின்றனர்'' என்றார்.

அண்ணாமலை முடிவு என்ன

பா.ஜ., ஐ.டி.,விங்க் மாநில செயலாளர் விஷ்ணுபிரசாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது: சமூகவலைத் தளம் மூலம் வென்ற த.வெ.க., தலைவர் விஜய்யை இளைஞர்கள் பலர் நம்புகின்றனர். அரசியல் சூழல் மாறிவிட்ட நிலையில், அவரை இனி 10 ஆண்டுகள் அசைப்பது கடினம். இதனால் பா.ஜ., இளைஞர்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர்.

விஜய் போன்ற இளைஞருக்கு எதிராக படித்த, தொழில் முனைவோர், இளைஞர்களிடையே செல்வாக்கு பெற்ற அண்ணாமலை போன்றவர்களால்தான் செயல்பட முடியும். அதற்காக அண்ணாமலை புதுப்பாதையில் பயணிப்பார் எனத் தெரிகிறது. அவருக்கு ரஜினி, பா.ஜ.,வின் தேசிய தலைமையில் உள்ளவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
தேர்தல் முடிவுக்குப் பின் அமெரிக்கா சென்ற அவர் நேற்று பெங்களூரு திரும்பியுள்ளார். மே 28 ல் தமிழகம் வரும் அவர் பின்னர் அரசியலில் ஈடுபடுவார். முக்கியத்துவம் இல்லாத நிலையில் புதிதாக முடிவெடுப்பார் என்று இளைஞர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

Advertisement

ஜூன் 11, 2026 01:54 pm

தவெகஒரு இந்து விரோத கட்சி இதற்கும் திமுகவிற்கும் அதிக வித்தியாசமில்லை. போக போக தெரியும். ஒரு முஸ்லீம் அமைச்சர் சனாதனத்தை ஒழிப்போம் என்று ஸ்டாலின் மகன் சொன்னதை ஆமோதிக்கிறேன் என்று சொன்ன ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவர்சொல்லாமா . முதலில் அவர் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்க பார்க்கட்டும். நடுநிலை அரசு என்றால் முதல்வர் பதவி வகிக்கும் ஜோசப் விஜய் இதை கண்டித்திருக்க வேண்டும். செய்யாத காரணம் என்ன. இவருக்கும் தமிழுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம். அவர்கள் முப்பாட்டன் தெலுங்கன் அதை மூடி மறைக்க இங்கே வேஷம் கட்டு றார். அதையும் சில மூடர்கள் நம்பி ஜால்றா தட்டுறான்.

Reply Rate this
மே 21, 2026 07:32 pm

அண்ணாமலை அரசியல் காலம் முடிந்துவிட்டது . இப்போது விஜயின் காலம். மத்திய பி.ஜே.பி அண்ணாமலையின் அருமை தெரியாமல் வீணடித்துவிட்டது .

Reply Rate this
எப்படியோ தெரியாம கெடைச்சு இருக்குற ஒத்தை சீட்டுக்கும் வேட்டு வெச்சிருப்பார் அண்ணாமலை.
மே 22, 2026 07:12 pm
Rate this
மே 21, 2026 03:14 am

மாற்றதை எதிர் பார்த்து போனவர்கள் துர்நாற்றத்தை கண்டு போன வேgathai விட அதிவேகமாக திரும்ப வர நேரிடும் . இதுவே இயற்கை. கொள்கை பற்று உடையவன் எங்கும் தாவ மாட்டான்.

Reply Rate this
மே 20, 2026 11:05 pm

ithaya.. ippo thaan Kandupuduchu irikaangalaa ...


- Ramana film Dialogue : Hearing from Tvk changed Ex Bjp Youths Mind voice

Reply Rate this
மே 20, 2026 10:28 pm

பிஜேபி தொண்டர்கள் இளைஞர்கள் யாரிடமும் சோரம் போக மாட்டார்கள்

Reply Rate this
12% வோட்டு இருக்குன்னு அண்ணாமலையோட சேந்து கூவின நீங்க, வெறும் 2.1% வாங்கி 26க்கு ஒரு சீட்டு மட்டும் வாங்கியது தரவுகள் சொல்லும் உண்மை. அப்போ மிச்ச 10% எங்கே சோரம் போனாங்கன்னு சொல்றியா?
மே 23, 2026 09:20 am
Rate this
மே 20, 2026 09:42 pm

அண்ணாமலை முடி எடுப்பார் , பாஜகவை மொட்டை அடிப்பார்.

Reply Rate this
மே 20, 2026 08:36 pm

I SAY THANKS TO EVERY ONE JOINING TO TVK . GOOD LUCK TO EVERY ONE. CHIEF MINISTER VIJAY DOING WONDERFUL JOB .

Reply Rate this
தலையெழுத்து, தற்குறியின் அறிவுரையை கேட்க வேண்டும் என்று.
மே 20, 2026 09:40 pm
Rate this
மே 20, 2026 07:11 pm

திரு அண்ணாமலை, சகாயம் போல மக்களுக்கு சேவை செய்யணும் எங்கிற உள்ளம் படைத்த எல்லாரும் ஒரு அணியில் வந்தால் தமிழகம் இன்னும் முன்னேறும். இப்போ தா வே க is better than other thiravida parties

Reply Rate this
மே 20, 2026 04:35 pm

அண்ணாமலையும் தா வே க வில் சேருவர்

Reply Rate this
மதம் மாறிய பின்பா? முன்பா ?
மே 20, 2026 05:41 pm
Rate this
MUTHU - Sivakasi
அண்ணாமலை-பிஜேபி தனித்து போட்டியிட்டிருந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகள் வாங்கியிருப்பர். அதனால் தவேக வோட்டு வாங்கி குறைந்து DMK தனிப்பெரும்பான்மை வர உதவி செய்திருக்கும். அதிமுக ஏற்கனவே அஸ்தமன திமுக. இந்த வகையில் EPS-அதிமுக தமிழ்நாட்டிற்கு உதவி செய்துள்ளார்.
மே 20, 2026 07:11 pm
Rate this
Sesh - Dubai
சிறந்த யோசனை. அதுவே அண்ணாமலைக்கு, த.வெ.க.,வுக்கு ம் - தமிழ்நாடு முன்னேற்றத்திற்கும் நல்லது.
மே 21, 2026 07:35 pm
Rate this
ஏன், தவெகவுக்கும் சங்கு ஊதுறதுக்கா? பாஜகவை கழுவி ஊத்தி மூடினது பத்தாதா?
மே 22, 2026 07:15 pm
Rate this
மே 20, 2026 04:27 pm

தானே தங்களைப்பற்றி அறியாதவர்கள் அடுத்தவர்களை பற்றி அறிய முயல்வது பயித்தியக்காரத்தனம். ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவன் கடல் கடந்து வெற்றிகள் கண்டவன் மன்னர்களுக்கு எல்லாம் மன்னன் கங்கை கொண்டவன் சோழன் ராஜ ராஜன். அவன் இருந்தபோது எழுதிக்கொடுத்த செப்பேடுகள் இன்று இந்திய நாட்டுக்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து திரும்ப கிடைத்துள்ளன. அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இன்றும் உலகை ஆச்சர்ய பட வைக்கிறது, அந்த செப்பேடுகள் தமிழ் மற்றும் சமஸ்க்ரித மொழிகளில் உள்ளன. அந்த மன்னன் காலத்து தமிழ் பண்பாடு கலாச்சாரம் அவற்றை பறை சாற்றுகின்றன. இங்கிருக்கும் சில மூடர்களோ அந்த மன்னனின், மக்களின் நம்பிக்கையையே சந்தேகிக்கின்றனர் அந்த நம்பிக்கைகளின் ஆதாரங்களையும் அஸ்திவாரத்தையும் அடியோடு அழிப்பேன் என்று உறுதி எடுக்கின்றனர். எங்கே தமிழன், எங்கே அவன் இறையாண்மை, இகழ்ந்தவனின் படத்தை அறையில் இட்டு தமிழை, தமிழனை அவர்கள் நபிக்கையை இகழ்பவர்களின் ஆட்சி தமிழன் ஆட்சி அல்ல. இது பா ஜ, அண்ணாமலை சம்பந்த பட்டது மட்டுமல்ல தமிழனின் தான் மான விஷயம். காலம் இதற்கு பதில் சொல்லும்.

Reply Rate this
MUTHU - Sivakasi
முதலில் இந்த வரலாற்று சம்பவ திரைப்படங்கள் மக்களிடம் தவறான கற்பனையை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுகின்றன. உதாரணமாய் பொன்னியின் செல்வன். திராவிட பகுதி மக்கள் வலுவான உடலமைப்பு கொண்டவர்கள் என்பது வரலாறு. மற்றும் சுருட்டை முடி கொண்டவர்கள். இது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் அப்படித்தான் இருந்தார்கள். பசுமை புரட்சி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவு திராவிட மக்களின் உடலமைப்பு மற்றும் மனஅமைப்பு மாற்றம் செய்து விட்டது. அப்படியே பெண்களின் உடலமைப்பும். இவர்கள் குந்தவைக்கு திரிஷா தேர்ந்தெடுத்து அதுவே அன்றைய பெண்களின் தோற்றம் என்பது போல் ஆகிவிட்டது.
மே 20, 2026 07:23 pm
Rate this