Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தேர்தல் விதி மீறிய திருமாவளவன், சீமான் மீது வழக்குப்பதிவு

 தேர்தல் விதி மீறிய திருமாவளவன், சீமான் மீது வழக்குப்பதிவு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நெல்லிக்குப்பம் : விசி கட்சி தலைவர் திருமாவளவன் மீது, தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்ருட்டி தொகுதி, விசி கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து, ஏப்., 10 இரவு, நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அவர், கூட்டம் நடந்த இடத்துக்கு இரவு, 10:20 மணிக்கு வந்தார்.தேர்தல் ஆணையம் விதிப்படி, இரவு, 10:00 மணி வரை தான், பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால், திருமாவளவன் பேசாமல் கையசைத்தபடி சென்றார். ஆனால், தொண்டர்கள் 'பானை' சின்னத்துக்கு ஓட்டு கேட்டு கோஷமிட்டனர். உதவி தேர்தல் அலுவலர் பலராமன் புகாரில், நெல்லிக்குப்பம் போலீசார், திருமாவளவன், வேட்பாளர் அப்துல் ரஹ்மான், தொகுதி செயலர் அருள்செல்வம் உட்பட பலர் மீது வழக்கு பதிந்தனர்.

அதேபோல, மதுரை மாவட்டம், பேரையூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் விதியை மீறி, நேற்றிரவு 10:20 மணி வரை பேசினார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

ஏப் 18, 2026 10:37 am

சும்மா ஜுஜுபி ஒண்ணுத்துக்கும் உதவாத கேசு.

Reply Rate this
ஏப் 13, 2026 07:15 am

தேர்தல் கமிஷன் வழக்கு இதுவரை பதித்த வழக்குகள் என்ன ஆனது யாருக்காவது எந்த கட்சிக்காவது தண்டனை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது உண்டா எதுவுமே இல்லை என்றால் எதற்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி என்ன செய்தது

இந்த தேர்தல் கமிஷன் ஒன்றும் இல்லை இது எல்லா கட்சிகளுக்கும் நல்லாவே தெரியும் இப்போது மட்டும் கமிஷன் தூங்கிக்கொண்டு தான் உள்ளது இன்னும் சொல்வதென்றால் ஆளும் கட்சிக்கு விசுவாசம் தேர்தல் நியாயமாக நடக்குமா.


.. வெளியே உள்ள நடைமுறையே வேறு எல்லோரையும் மாற்றும் மத்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைவரையும் மாற்ற வேண்டும் இங்கே தேர்தல் கமிஷன் குறட்டை விட்டு தூங்குது......

Reply Rate this
ஏப் 12, 2026 09:04 pm

அதாவது எதிராளியின் பிறப்பு இறப்பு போன்ற சில்லறை விஷயங்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டவை. அண்டா குண்டா கொடுப்பதும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு சொல்வதும் விதி முறையே. உங்க பசங்க இது பற்றி உங்களை கேள்வி கேட்பார்களா இல்லையா? இல்ல 25 வருசம் கழித்து புத்தகம் எழுதுவீர்களா ?

Reply Rate this