Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 த.வெ.க., வேட்பாளர் தேர்வில் விஜய்க்கு உதவும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள்

 த.வெ.க., வேட்பாளர் தேர்வில் விஜய்க்கு உதவும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள்

சென்னை: முதல்முறையாக சட்டசபை தேர்தலில் கள மிறங்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் உதவி செய்கின்றன.

த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:

மக்களிடம் செல்வாக்கு உள்ள நேர்மையான மற்றும் திறமையான நபர்களை, த.வெ.க., வேட்பாளர்களாக அறிவிக்க, அக்கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த, 4,000க்கும் மேற்பட்டோரில், தகுதியானவர்களை தேர்வு செய்து, விஜய் மற்றும் மூத்த நிர்வாகிகள், நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

எனினும், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே அதிருப்தி ஏற்படாமல் இருக்கவும், மக்களின் ஆதரவு முழுது மாக இருக்கும் வகையிலும் , வேட்பாளர் பட்டியல் இருக்க வேண்டும் என்று விஜய் கருதுகிறார்.

இதற்காக அவருக்கு, கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் உதவுகின்றன.

முன்னணி கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்கு, மக்களுடன் நேரடி தொடர்பு உள்ளது. த.வெ.க., வில் போட்டியிட விண்ணப்பித்தவர்களில், ஒரு தொகுதிக்கு 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் குடும்ப பின்னணி, கல்வி நிலை, அரசியல் பின்னணி, மக்கள் தொடர்பு ஆகியவை குறித்து, அந்த நிறுவனங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அவற்றின் அடிப்படையில், தொகுதிக்கு மூன்று பேரை தேர்வு செய்து, விஜயிடம் கல்வி நிறுவனங்கள் பரிந்துரை செய்ய உள்ளன. அதில் ஒருவரை வேட்பாளராக, விஜய் தேர்வு செய்ய உள்ளார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement