Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தனி தொகுதியில் போட்டியிடும் கிறிஸ்துவர்கள் தகுதி நீக்கம்: தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை

 தனி தொகுதியில் போட்டியிடும் கிறிஸ்துவர்கள் தகுதி நீக்கம்: தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'கிறிஸ்துவர்களாக மதம் மாறி வாழ்ந்து, தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது: தேர்தலில் தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும், தங்களுடைய தினசரி வாழ்வில் கிறிஸ்துவ வாழ்வியல் முறைப்படி வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த, காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் திருமாவளவன், திண்டிவனம் வேட்பாளர் வன்னி அரசு, பெரியகுளம் வேட்பாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சி வேட்பாளர் மாலதி, செய்யூர் வேட்பாளர் சிந்தனைசெல்வன், அரக்கோணம் வேட்பாளர் எழில் கரோலின் ஆகியோர் கிறிஸ்துவர்கள்.

இதுபோல, எழும்பூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் தமிழன் பிரசன்னா, வால்பாறை தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமண சிங் ஆகியோரும் கிறிஸ்துவர்கள்.

இவர்கள், பட்டியலின மக்களுக்கான தனி தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இது, முழுக்க முழுக்க இந்திய அரசியலமைப்பு சட்டப்படி குற்றம். இவர்களின் ஜாதி சான்றிதழின் உண்மையை, கண்டறிந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement