தொகுதி மறு வரையறையால் தென்மாநிலங்களுக்கே பலன்: பா.ஜ., துகின் சின்ஹா கருத்து
மதுரை: ''தொகுதி மறுவரையறை செய்வதால் பலனடையப் போவது தென்மாநிலங்கள்தான்,'' என பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் துகின் சின்ஹா தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 8வது படிக்கும் மாணவர்கள் கூட, போதைக்கு அடிமையாகி விட்டனர். ஒரு மாணவியை 4 பேர் கஞ்சா போதையில் தாக்கியதால் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்திற்கு 'அப்பா' என்ற இடத்தில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
அவருக்கு மக்களைப் பற்றி கவலை கிடையாது. இதனால் தி.மு.க., அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது.
தொகுதி மறுவரையறை இந்தியா முழுவதும் நடக்கிறது. இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் வரை தொகுதிகள் அதிகரிக்கும். மறுவரையறைக்குப் பின் தமிழகத்தில் 59 தொகுதிகள் வரும்.
அதேநேரம் ராஜஸ்தானில் 37 ஆகும். இதில் யாருக்கு அதிகம் உள்ளது என்பது தெளி வாக தெரிகிறது. தோல்வி பயம் ஏற்பட்டு உள்ளதால் மக்களை திசை திருப்ப இதுபோல பேசுகின்றனர். தொகுதி மறுவரையறையில் அதிகம் பலனடைவது தென்மாநிலங்கள்தான்.
தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 300 சதவீதத்திற்கும் மேலாக நடந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் போடப் பட்டுள்ளன.
மூவாயிரம் கிலோ கொக்கைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. ஜாபர் சாதிக்கை கைது செய்தாகி விட்டதுடன் வேலை முடிந்ததா. விசாரணை நடத்த வேண்டாமா. இவ்வாறு துகின் சின்ஹா கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்