வரும் 4ம் தேதி காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்
சென்னை: 'தமிழகத்தில், வரும் 4ம் தேதி காலை 8:00 மணிக்கு, தபால் ஓட்டுகள் எண்ணிக்கையும்; காலை 8:30 மணிக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி உள்ள ஓட்டுகளை எண்ணும் பணியும் துவங்கும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, மே 4ம் தேதி, 62 ஓட்டு எண்ணும் மையங்களில் நடக்க உள்ளது. மேஜைக்கு 500 ஓட்டுகள் எண்ணும் பணி, காலை 8:00 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். காலை 8:30 மணிக்கு, ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கும்.
ஒரு மேஜைக்கு 500 தபால் ஓட்டுகள் என்ற விகிதத்தில், அவை எண்ணப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 3.60 லட்சம் அரசு அலுவலர்களில், 2.88 லட்சம் பேர், தபால் ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் துறை சார்ந்த அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்கள் என, 3.36 லட்சம் பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர். 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் பெற்று, நேரடியாக ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டுள்ளனர்.
6.37 லட்சம் மேலும், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1.73 லட்சம் பேர்; 18,000 சேவை வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்