Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தர்மபுரியில் அதிர்ச்சி: திமுக நிர்வாகியிடம் ரூ.8 ஆயிரம் கூப்பன்கள், கிப்ட் டோக்கன்கள் பறிமுதல்

தர்மபுரியில் அதிர்ச்சி: திமுக நிர்வாகியிடம் ரூ.8 ஆயிரம் கூப்பன்கள், கிப்ட் டோக்கன்கள் பறிமுதல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

தர்மபுரி, பாலக்கோடு தொகுதியில் தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார், 45, வைத்திருந்த 1150 எண்ணிக்கையிலான ரூ.8,000 கூப்பன்கள், 1800 கிப்ட் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் (அதிமுக), செந்தில் குமார் (திமுக), பூபதி (நாம் தமிழர் கட்சி), கோபி (தவெ க) வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியில் திமுக நிர்வாகிகள் சிலர், வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்து, எங்கள் சின்னத்தில் ஓட்டு போடுங்கள், வெற்றி பெற்றதும் ரொக்கப் பரிசு, மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வழங்குவதாக கூறிவதாக புகார் எழுந்தது.அதன்படி, பாலக்கோடு சட்டசபை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்காளர்களுக்கு வழங்க, தி.மு.க., காரிமங்கலம் மத்திய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில்குமார் எடுத்து சென்ற 8,000 ரூபாய்க்கான, 1,150 கூப்பன் மற்றும், 1,800 கிப்ட் டோக்கனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது சில திமுக நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Advertisement

ஏப் 11, 2026 09:23 pm

இதை ஏன் தேர்தல் ஆணையம் தடுக்கக்கூடாது பணம் தருகிறோம் என்ற கூப்பனை கொடுத்தாலும் அது பணத்தகிற்கு சமமமாகவே சாட்சியாகவே இருக்கிறதே அதை ஏன் இந்த தேர்தல் ஆணையம் தடுக்க முடியாதா

Reply Rate this
ஏப் 11, 2026 06:26 pm

நல்ல வளர்ச்சி, போன தடவை ஜெயித்தான் ஏமாற்றினான். இந்த முறை தேர்தலுக்கு முன்பே ஏமாற்றுகிறான்.அந்த அளவு முட்டாள்களாக்கியுள்ளனர் ஜனங்களை. நக்லஸ்ட்டுகளை உண்டாக்குவதும் அரசியல்வாதிகள் தான்

Reply Rate this
ஏப் 11, 2026 05:21 pm

தப்பித்தவறி தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் ரூ8000 கூப்பன் பெற்றுக்கொண்டவர்கள் ரூ8000 கூப்பன் கொடுத்தவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை இப்போதே ஏப்ரல் 11தமிழ்நாட்டில் தேர்தல் ஏப்ரல்23 நடக்கும் முன்பே மே 4 தேர்தல் வெற்றி பெருபவர்கள் யார் என்று தெரியாமலே தேர்தலில் திமுக வெற்றி பேருவிட்டது போல் ரூ8000 கூப்பன் கூப்பன் கொடுத்தவர்கள் மனநல மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும்...

Reply Rate this
ஏப் 11, 2026 05:00 pm

தமிழ்நாட்டில் தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வார்கள்...

Reply Rate this
ஏப் 11, 2026 03:54 pm

முன்பு வேலூரில் துரைமுருகன் ஆட்களிடம் வாக்குச் சாவடி பெயர்களுடன் கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டது. ஏதாவது செய்ய முடிந்ததா?

Reply Rate this
பணத்தை புடிக்க முடிந்ததே. அது என்னவாம்?
ஏப் 11, 2026 05:00 pm
Rate this
ஏப் 11, 2026 03:11 pm

மக்களே இலவசங்களை பார்த்து ஏமாறாதீர்கள். திராவிட கட்சிகள் மற்றும் திராவிட சித்தாந்தங்களை முழுமையாக விட்டொழித்து, புதிய சிந்தனை மற்றும் புதிய விதிமுறைகள் வந்தால் மட்டுமே இனிமேல் தமிழகத்தையும், பெண்களையும், குழந்தைகளையும் நல்லமுறையில் காப்பாற்றமுடியும். இல்லை என்றாலும் அரசுஎனும் குதிரை ஓடும், ஒரே இடத்தில சுத்தி சுத்தி ஓடும். ஆனால் முன்னோக்கி ஓடாது. அதனையே கணக்குக்காட்டி ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள்.

Reply Rate this
ஏப் 11, 2026 03:10 pm

ஏற்கனவே அடித்ததில் சிறு பகுதியை கொடுத்தால் கூட ஓட்டுக்கு 20,000 எளிதாக நோகாமல் கொடுக்கலாம். அவனவன் பல லட்சம் கோடிகள் அடித்திருக்கிறான்.

Reply Rate this
ஏப் 11, 2026 02:57 pm

திமுக என்றாலே பித்தலாட்டம கும்பலை என்று பொருள் கொள்ளவேண்டும்.

Reply Rate this
ஏப் 11, 2026 02:34 pm

இதில் அதிர்ச்சி என்ன இருக்கிறது? இது திமுக மற்றும் அதிமுக-வுக்கு சகஜம்தான். வாக்குகளுக்காக மக்களுக்கு லஞ்சம் கொடுப்பது இந்த இருவருக்கும் கை வந்த கலை . இந்த முறை தேர்தல் நடத்தை விதிகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும் என்பதால், கடந்த ஒரு வருடமாகவே இதைத் தொடங்கிவிட்டார்கள்.

Reply Rate this
ஏப் 11, 2026 01:50 pm

பப்பலக்க பிலாப்பி.......

Reply Rate this