Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


நாற்காலிக்காக வரவில்லை: சேலத்தில் கமல் பேச்சு

நாற்காலிக்காக வரவில்லை: சேலத்தில் கமல் பேச்சு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சேலம்: நான் திராவிட பல்லக்கை தூக்குவதற்கு எனது தோளுக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணி வந்துள்ளேன். நான் நாற்காலிக்காக வரவில்லை என ராஜ்யசபா எம்பி கமல் பேசினார்.

சேலத்தில் நடந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கமல் பேசியதாவது: இங்கே அமர்ந்திருப்பது தேர்தலுக்கான கூட்டணியாக மட்டும் பார்க்கவில்லை. இதை திராவிட குடும்பமாக பார்க்கிறேன். திராவிடம் நாட்டை தழுவியது என்று நான் முன்பு சொன்னது அன்றைய தினம் யாரின் புருவம் உயரவில்லை. அதை தெரிந்தவர்கள் அங்கு அமர்ந்தனர். அதை தெரியாதவர்கள் புருவம் உயர்த்தினர். அதற்கான சான்று இங்கு அமர்ந்திருக்கிறது.

நாட்டுக்காக

நான் பேசுவதற்கான குறிப்புகளை எல்லாம் ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி எழுதி கொடுத்து விட்டு போய்விட்டார்கள். இன்று நிகழும் கொடுமையான அரசியலில் சொல்ல வேண்டிய சில கருத்துகள் தான் இருக்கின்றன. இதை அண்ணாதுரை எதிர்பார்த்தது தான். தெற்கு தேய்கிறது என சொன்ன போது அப்படி சொல்லாதீர்கள் என்று கூறினர். பின், அவர் எடுத்த எழுச்சி கொள்கையை பின்வாங்கியதை நாட்டுக்காக செய்தார்.

ஆனால், நான் எழுப்பிய குரல் அதற்கான காரணம் இன்னும் அப்படியே இருக்கிறது என்று சொன்னார். இன்றும் அப்படியே இருக்கிறது என்பது தான் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் போலி அரசியல், மக்கள் சார்பு இல்லாத அரசியல் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சின்ன மீன்

நான் திமுக ஆட்சி அமைய பிரசாரத்திற்கு மட்டும் வரவில்லை. நாளை நமக்கு நடக்கப்போகும் அநீதிக்கு எதிரான குரலாகவும், எழுச்சிக்கான குரலாகவும் இது இருக்க வேண்டும்.33 சதவீத மகளிர் உரிமையாக ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அத்தனை பேர் சொன்ன விஷயத்தை இன்று புதிய கண்டுபிடிப்பு போல் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்கு தெரியும்.

இன்று நீங்கள் இப்போது காட்டும் 33 விழுக்காடு என்பது தூண்டில் முனையில் வைத்திருக்கும் சின்ன மீன். அதை கவ்வ மாட்டோம். விவாதிப்போம். இதையும், தொகுதி மறுவரை உங்கள் சூழ்ச்சியையும் ஒன்றாக இணைக்கக்கூடாது என்று. இது வேறு அது வேறு. இரண்டையும் ஒன்றாக பேசுவோம் என்கிறீர்கள்.

சந்தேகம் கிடையாது

தேர்தல் முடியட்டும் பேசலாம் என்றால்,உடனே பேசுவோம் என்கின்றீர்கள். மநீம சார்பாக திராவிட தலைவர்கள் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைத்தீர்கள். இந்த தேர்தலை விட ராஜ்யசபாவுக்கு சென்றே ஆக வேண்டும் என முதல்வர் கூறினார். அதை செய்யப் போகிறேன்.
கருப்பு நிறத்தை என்றோ போட்டுக் கொண்டேன். தமிழகத்துக்கு அநீதி நிகழும் போது எல்லாம் கொடி உயர்த்தி பிடித்தது திராவிட குடும்பம். இதை சொல்வதில் சந்தேகமும் கிடையாது. சங்கோஜமும் கிடையாது.

நான் திராவிட பல்லக்கை தூக்குவதற்கு எனது தோளுக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணி வந்துள்ளேன். நான் அமரும் நாற்காலிக்காக வரவில்லை. தமிழகத்துக்காக பதற வேண்டிய நேரம் இது. குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. 33 விழுக்காடு எனும் இந்த தூண்டில் சின்னமீனை இங்கு சொல்லி புரிய வைத்து விடலாம். இங்குள்ள கல்வியறிவு உபியில் கிடையாது. வேறு எங்கும் கிடையாது என்பது தான் சரித்திரமும், தரவுகளும் சொல்கிறது.

சரித்திரம்

திமுக அரசு அறிவித்த நலத்திட்டங்கள் வாயிலாக அதிக பெண்கள் கல்வியில் சேர்ந்திருப்பது என்பது உண்மை. இது இங்கு நடக்கிறது என்பது உண்மை. இதை இங்கு புரிய வைத்துவிடலாம். இங்கு கல்வியறிவு அதிகம். அது இல்லாத பல மாநிலம் இருக்கின்றன. அவைகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பது தமிழகம், தமிழ்நாடு என்பதை நாளைய சரித்திரம் சொல்லும்.

பல்வேறு துறைகளில் முதலிடம் வகிக்கிறோம் என்ற உண்மையை கசந்தாலும் அவர்கள் ஒப்புக்கொள்ளும் நிலைமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த மேடையில் யாரையும் திட்ட வரவில்லை. 10 சீட் கிடைத்து இருந்தாலும் யாரையும் திட்ட மாட்டேன். எதிர்க்கட்சிகள் என்று எதையும் பார்ப்பது இல்லை. கட்சிகள் அவ்வளவு தான். தமிழகம் நம்முடையது. சித்தாந்தம் மாறுபாடாக இருந்தாலும் அதை அரவணைக்க வேண்டும் என்பதில் உதாரணமாக ஸ்டாலின் உள்ளார்.

நாளை நமதே

நான் 21 வயதாக இருக்கும் போது கருணாநிதி ,'நீ ஏன் திமுகவில் சேரவில்லை' என செய்தி அனுப்பி இருந்தார். அன்று பதில் சொல்ல தைரியம் இல்லை. இன்று அந்த குடும்பத்தில் சேர்ந்துவிட்டேன் என்பது தான் உண்மை. எனக்கு தனிக்கட்சி இருக்கிறது என்றேன்.

ஆனால் வைத்துக் கொள்ளுங்கள். திராவிடம் வெல்ல வேண்டும். உயர வேண்டும் என ஸ்டாலின் சொன்ன பெருந்தன்மையை பிரேமலதா சுட்டிக்காட்டினார். இன்று இந்த கூட்டத்தில் 30 ஆயிரம் பெண்கள் நடந்து இருக்கிறார்கள். நாளை நமதே என்பது அனைவருக்கும் சேர வேண்டும். ஒரு கட்சிக்கு மட்டும் இருக்கக்கூடாது. இவ்வாறு கமல் பேசினார்.

Advertisement

ஏப் 16, 2026 01:48 pm

ராஜ்யசபாவில் நின்று கொண்டே இருக்கும் ஒரு திருட்டு மாடல் கூட்டத்தின் ஒரு அடிமைக்கு

Reply Rate this
ஏப் 16, 2026 11:55 am

இதற்கு மேல் என்ன வேண்டுமாம் இந்த மானங்கெட்ட பிழைப்பிற்கு...

Reply Rate this
ஏப் 16, 2026 10:56 am

he has already got the chair only things he has to cement it

Reply Rate this
ஏப் 16, 2026 10:07 am

அந்த டிவி என்ன பாவம் பன்னிச்சு ஆண்டவரே நேர போயி போட்டி வாங்கிட்டு போக வேண்டியது வேண்டியது தானே

Reply Rate this
ஏப் 16, 2026 06:48 am

உண்மை தான் நாற்காலிக்கு இவர் வரவில்லை பெட்டிக்கு தான் வந்தார். டார்ச் லைட் பியூஸ் போய் விட்டது.

Reply Rate this
ஏப் 16, 2026 05:23 am

தி.மு.கவிற்கு பல்லாக்கு தூக்குவதை தன் தோளுக்கு கிடைத்த வாய்ப்பாக பெருமை பேசும் கமல் கடும் போட்டிக்கு இடையே ஆகச் சிறந்த தி.மு.க கொத்தடிமை என்ற விருதினை பெருமையுடன் தட்டிச் செல்கிறார்.

Reply Rate this
ஏப் 16, 2026 05:03 am

ஆமாம், சார் நாற்காலிக்காக வரவில்லை. டார்ச் லைட்டை வைத்து சூரியனுக்கு விளக்குப் பிடிக்கவும், பெட்டி வாங்கவும் மட்டுமே வந்தார்.

Reply Rate this
ஏப் 16, 2026 05:01 am

நாற்காலி இல்லேன்னு தெரிஞ்சுதான் வாங்கின காசுக்கு கட்சிய அடகு வைச்சாச்சு
இன்னும் என்ன கூவல்

Reply Rate this

ஆனால் கட்சிக்காரர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கமாட்டீங்க , அப்படித்தானே ? ஒருவனாவது உங்க மீது வழக்கு பதிந்தால் பின்வரும் நாட்களில் பகல்கொள்ளைகள் தடுக்கப்படும் என்பது எனது எண்ணம்

Reply Rate this
ஏப் 16, 2026 01:06 am

கமல் சார் என்ன சொல்ல வர்றீங்க ஒண்ணுமே புரியவில்லை சின்ன மீனுங்கிறீங்க அப்புறம் பெரிய. மீனுங்கிறீங்க உனக்கு மீன் வேணும்னா சொல்லுங்க கூடை கூடையாக அனுப்பி வைக்கிறோம் நீங்க மீனை உபாயோகிக்கப்படுத்துவீங்க என்று எங்களுக்கு தெரியவே தெரியாது.அப்புறம் பல்லக்கு தூக்குவாயா எதற்கு நீ உலகநாயகனாக சினிமா உலகில் வளம் வந்துவிட்டு அரசியலில் புகுந்து எதற்காக பல்லக்கு தூக்க வேண்டும் .எதற்கும் தயாராக இருப்பதாக சொன்னது தமிழக மக்களை மிகவும் பாதிக்கிறது நீங்க பேசாம ராஜ்ய சபாவிற்கு போய்விடுங்க

Reply Rate this