தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் குவாரியில் இளைஞர் சடலம்; அ.தி.மு.க., கடும் விமர்சனம்
சென்னை: 'ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., பழனியாண்டியின் மகனுக்கு சொந்தமான குவாரியில், இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை வெளியிட்ட பதிவு:
ஸ்ரீரங்கம் தி.மு.க., -- எம்.எல்.ஏ., பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான குவாரியில், திண்டுக்கல் மாவட்டம், சரளைப்பட்டியில், 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கருப்பசாமி, சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே, தனக்கு சொந்தமான குவாரியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர், கேமரா மேன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் பழனியாண்டி.
தற்போது அவர் மகனுக்கு சொந்தமான குவாரியில் ஒரு சடலம் மீட்கப்பட்டிருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
எனவே, எந்தவித பாரபட்சமும் பாராமல், இளைஞர் கருப்பசாமியின் மரணம் குறித்து, சட்டப்பூர்வமாக விசாரித்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்