தி.மு.க., தேர்தல் அறிக்கை வில்லன்; காமெடியன்
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்வதற்கான எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. தி.மு.க., தேர்தல் அறிக்கை என்பது, கதாநாயகனும் அல்ல; கதாநாயகியும் அல்ல. வில்லனாகவும், காமெடியனாகவும் தான் உள்ளது.
கடந்த தேர்தலின்போது, 505 வாக்குறுதிகளை அளித்த தி.மு.க., அவற்றில் 66 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியது. இப்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63, முந்தைய தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றவை தான். அவற்றுக்கு வேறு பெயரைச் சூட்டி, புதிய வாக்குறுதிகள் போல காட்டி மோசடி செய்ய தி.மு.க., முயற்சித்துள்ளது.
-- அன்புமணி, தலைவர், பா.ம.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்