Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஹிந்து கோவில்கள் மீது தி.மு.க., அரசு பாரபட்சம்

 ஹிந்து கோவில்கள் மீது தி.மு.க., அரசு பாரபட்சம்

ரம்ஜான் நோன்புக்காக, மசூதிகளுக்கு 8,700 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. இதனால், 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்; இந்தாண்டு, வழக்கத்தை விட அதிகமாக ஒதுக்கி உள்ளது. கடந்த 2021ல், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'ஹிந்து கோவில்கள் பராமரிப்புக்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என கூறப்பட்டது. ஆனால், அந்த நிதி இன்றுவரை ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தில், '17,000 ஹிந்து கோவில்களில், ஒரு வேளை பூஜை செய்யக்கூட வசதி இல்லை' என கோர்ட்டில் அரசே ஒப்புக்கொள்கிறது. கோவில்களின் வருமானத்தை எடுத்துக்கொள்ளும் தி.மு.க. அரசுக்கு, ஹிந்து கோவில்கள் பற்றி எந்த கவலையும் இல்லை. ஆனால், சர்ச், மசூதிகளை புனரமைக்க, முதல்வர் ஸ்டாலின், 20 கோடி ரூபாய் ஒதுக்குகிறார். முஸ்லிம்கள் ஓட்டுகளை பெறுவது மட்டுமே தி.மு.க.,வின் திட்டம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

- காடேஸ்வரா சுப்ரமணியம்

தலைவர், ஹிந்து முன்னணி

Advertisement